மாவீரர்களது பெற்றோர்கள் மங்கல வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு முதல் நிகழ்வாக உயிர்த் தியாகம் செய்த 2 மாவீரர்களின் தாயார் சதாசிவம் கமலேஸ்வரி, முன்னாள் போராளி சி.கர்த்தகன் ஆகியோரினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் மாவீரர்கள் இந்த மண்ணிற்கு ஆற்றிய உயிர்த்தியாகம் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் , கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர்களான க.விஜிந்தன், க.தவராசா, பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். |