புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2024

பொது வேட்பாளர் குறித்து ஆராய வவுனியாவில் கூடுகிறது தமிழரசின் மத்திய குழு!

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் உள்ள மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் உள்ள மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு, கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக நிகழ்ச்சி நிரலிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘மக்கள் மனு’ கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை.சோ.சேனாதிராஜா, சரவணபவன் மற்றும் கிழக்கு மாகாண அங்கத்தவர்களான அரியநேத்திரன், ஸ்ரீநேசன் போன்றவர்கள் பங்கேற்றிருந்தனர். இவர்கள் கொள்கை அளவில் பொதுவேட்பாளர் விடயத்தினை ஆதரித்திருந்ததோடு கட்சி ரீதியாக தீர்மானம் எடுப்பதற்கு 14 நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தனர்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறீதரன் தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பொது வேட்பாளர் விடயத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். கலையரசன் கட்சி எந்த முடிவினை எடுக்கின்றதோ அதற்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad