புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2024

தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன்? -சிறீதரனிடம் துளாவினார் இந்தியத் தூதுவர்.]

www.pungudutivuswiss.com


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றியும், இத்தேர்தலில் வாக்களிப்பது குறித்து தமிழ் மக்கள் எவ்வாறான மனநிலையில் இருக்கின்றார்கள்? அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது பற்றியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் எஸ். சிறீதரனிடம்  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கேட்டறிந்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றியும், இத்தேர்தலில் வாக்களிப்பது குறித்து தமிழ் மக்கள் எவ்வாறான மனநிலையில் இருக்கின்றார்கள்? அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது பற்றியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் எஸ். சிறீதரனிடம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கேட்டறிந்துள்ளார்

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறீதரனுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டிருப்பது பற்றியும், இத்தேர்தலில் வாக்களிப்பது குறித்து தமிழர்கள் எவ்வாறான மனநிலையில் இருக்கிறார்கள்? அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? என்பது பற்றியும் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சிறிதரனிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சிறிதரன், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த இறுதித்தீர்மானம் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே மேற்கொள்ளப்படுமென சுட்டிக்காட்டியதுடன், இருப்பினும் நீண்டகாலமாக தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வழங்கப்படாதிருக்கும் நிலையில் இம்முறை தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது சிறந்த மாற்றுத்திட்டமாக அமையும் என்ற நிலைப்பாடு தம் மத்தியில் காணப்படுவதாக எடுத்துரைத்தார்.

'தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வானது உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக அமையவேண்டும். இருப்பினும் தற்போது நடைமுறையில் இருக்கும் ஒற்றையாட்சிக்குள் அது சாத்தியமில்லை. அண்மைய காலங்களில் சிங்களவர்கள் வாழாத, தமிழர்களுக்குச் சொந்தமான பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.

புதிதாக பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. சிங்களவர்கள் வசிக்காத கிளிநொச்சி நகரத்தில் 3 விகாரைகளும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் 21 விகாரைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்குள் சிங்கள - தமிழ் மக்களுக்கு இடையில் பிணக்கு ஏற்படாதவாறு தமிழர்களுக்கான நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கான திராணியுள்ள தலைவர் ஒருவர் எதிர்வரும் தேர்தலில் தெரிவுசெய்யப்படவேண்டிய அவசியம் காணப்படுகின்றது' என தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான யோசனையின் பின்னணி குறித்து இந்திய உயர்ஸ்தானிகருக்கு சிறிதரன் விரிவாக விளக்கமளித்தார்

ad

ad