புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2024

பொது வேட்பாளர் விவகாரம் - தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாராகிறது சிவில் பிரதிநிதிகள் குழு!

www.pungudutivuswiss.com


தமிழ் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடனான பேச்சுக்களை விரைவில் ஆரம்பிப்பதற்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய செயற்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழ் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடனான பேச்சுக்களை விரைவில் ஆரம்பிப்பதற்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய செயற்குழு திட்டமிட்டுள்ளது

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பொதுக்கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சிவில் அமைப்புக்களின் சார்பில் வேலன் சுவாமிகள், அகத்தியர் அடிகளார், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், கலாநிதி. சிதம்பரநாதன், நிலாந்தன், யோதிலிங்கம், யதீந்திரா, சிவயோகநாதன், நரேந்திரசிங்கம், சுந்தரேஸ்வரர் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தின் பிரதிநிதிகள் இருவர் கொண்ட செயற்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது அடுத்துவரும் நாட்களில் அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து உரையாடல்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. குறிப்பாக, பொது வேட்பாளர் விடயத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டை உடைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் பிரதிநிதிகளையும் நேரில் சந்திப்பதற்கு அக்குழு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அரசியல் கட்சிகளுடனான உரையாடல்களை அடுத்து பொதுக் கட்டமைப்பொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதோடு, பொதுக்கட்டமைப்பின் கீழாக பத்து உபகுழுக்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

இந்த உபகுழுக்கள் அரசியல் கட்சி, சின்னம், வேட்பாளர், தேர்தல் விஞ்ஞாபனம், நிதி, பிரசாரம் உள்ளிட்ட விடயங்களையும் கையாளும் வகையில் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad