ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தன் வசம் வைத்துக் கொள்ளும் நோக்கில் குறித்த அபிவிருத்தி நிதி ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான ஒதுக்கீடு கிடைக்க பெற்றுள்ளது. ஏற்கனவே யாழ் தேர்தல் தொகுதிக்காக யாழ் மாவட்ட செயலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு சுமார் 4 கோடி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கு சுமார் 2 கோடி மற்றும் வன்னி தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனுக்கு சுமார் 2 கோடி ரூபாய் என ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமக்கு ஏன் ஜனாதிபதியின் விசேட அபிவிருத்தி நிதி ஒதுக்கவில்லை என ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திறகு சுமார் 4 கோடி 60 இலட்சம் மற்றும் செல்வராஜா கஜேந்திரனுக்கு சுமார் 2 கோடி க்கான அனுமதிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து பாராளுமன்ற உறுப்பினரான எம் ஏ சுமந்திரனுக்கு சுமார் 4 கோடி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது |