வவுனியா தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த வாடகை வீடு பாலியல் தொழில் விடுதியாக பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் குறித்த வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் காலி மற்றும் மாத்தறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது |