புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2024

குத்துவிளக்கு கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை நாளை  கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் உள்ள புளொட் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் ரெலோ அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறீகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் துளசி ஆகியோர் பங்காளிக் கட்சிகள் சார்பில் கலந்துகொண்டனர்

ad

ad