பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக கடந்த சில நாட்களாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். சிலர் இரவு முழுவதும் உணவு, கழிப்பறை வசதியின்றி கடவுச்சீட்டு அலுவலகம் முன்பு வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. இதையடுத்து, இன்று முதல் ஒரு நாளைக்கு 1,000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் |