புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2024

மீண்டும் யாழ்தேவி- நாமலின் தேர்தல் வாக்குறுதி! [Thursday 2024-08-29 04:00]

www.pungudutivuswiss.com


தற்போதைய நிர்வாகத்தின் செயல்திறனற்ற தன்மையால் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி ரயில் பாதைகளின் சேவைகளை மீண்டும் தொடங்கி வைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

தற்போதைய நிர்வாகத்தின் செயல்திறனற்ற தன்மையால் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி ரயில் பாதைகளின் சேவைகளை மீண்டும் தொடங்கி வைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்

30 வருட கால யுத்தத்தை முடித்ததுடன் வடக்கு மாகாணத்திற்கான யாழ்தேவி ரயில் பாதைகளை ராஜபக்ஷ அரசாங்கம் வெற்றிகரமாக உருவாக்கித் தந்ததாக அவர் தெரிவித்தார்.

30 வருடகால யுத்தத்தை முடித்துக் கொண்டு எமது அரசாங்கம் வடமாகாணத்திற்கான யாழ் தேவி ரயில் பாதைகளை வெற்றிகரமாக நிறுவியது.எனினும் தற்போதைய நிர்வாகத்தின் செயற்திறன் இன்மையினால் இந்த சேவைகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ராஜபக்ச தெரிவித்தார்.

மாத்தறை முதல் கதிர்காமம் வரையிலான 114 கிலோமீற்றர் தூரமான புகையிரதப் பாதையை தாமதமின்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்

ad

ad