வவுனியாவில் 14 வயது மாணவனை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய பயிலுனர் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று(24.09.2024) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவில் உள்ள இரு பாலங்கள் தொடர்பில் பொதுமக்கள் கோரிக்கை
முல்லைத்தீவில் உள்ள இரு பாலங்கள் தொடர்பில் பொதுமக்கள் கோரிக்கை
பொலிஸ் முறைப்பாடு
14 வயது மாணவனை குறித்த பயிலுனர் ஆசிரியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாகவும், இது தொடர்பில் பாடசாலையில் முறைப்பாடு செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில் மாணவனின் பெற்றோரால் சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் 14 வயது மாணவனை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய பயிலுனர் ஆசிரியை கைது | Teacher Arrested Inappropriate Behavior Vavuniya
இந்நிலையில், மாணவனின் பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பாதிக்கப்பட்ட மாணவனின் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், வாக்கு மூலத்தின் அடிப்படையில் பயிலுனர் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.