கொழும்பு டி மல் வீதியிலுள்ள கட்சிக் காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளிக்க வந்த போது மக்கள் அவர்களுடன் வரவில்லை எனத் தோன்றுவதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி பொதுஜன பெரமுனவிலுள்ள பெரும்பான்மையான மக்கள் அனுர குமார திஸாநாயக்கவுக்கே வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். |