புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2024

காணி வாங்க கனடாவில் இருந்து சென்றவர் 85 இலட்சம் ரூபாயை தரகரிடம் பறிகொடுத்தார்!

www.pungudutivuswiss.com


கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தரகரால் அபகரிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தரகரால் அபகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடா நாட்டில் வசித்து வருகிறார். அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

அவருக்கு குறித்த காணியை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த காணி தரகர் ஒருவரே அடையாளம் காட்டி , காணி உரிமையாளருடன் பேச்சுக்களையும் நடத்தியுள்ளார்.

அதனை அடுத்து காணியை கொள்வனவு செய்வதற்கு 85 இலட்ச ரூபாய் பணத்தினை ரொக்கமாக தயார் செய்திருந்தார். அந்த பணத்தினை கனடா வாசி தன்னுடன் வைத்திருந்தார்.

அவர் அசந்த நேரம் பார்த்து , காணி தரகர் 85 இலட்ச ரூபாய் பணத்தினை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ad

ad