-

24 ஜூன், 2025

பளை சிறீதரன் ஆதரவு தமிழரசிடம்

www.pungudutivuswiss.com
கிளிநொச்சியிலுள்ள மூன்றாவது உள்ளுராட்சி சபையான
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சிறீதரன்
ஆதரவு தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு செய்யப்படடுள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் போது இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் சுப்பிரமணியம் சுரேனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது ஏனைய தெரிவு இல்லாத நிலையில் சுப்ரமணியம் சுரேன் தெரிவு செய்யப்பட்டார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 06 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 03 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 03 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக 01 உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளராக சிவகுரு செல்வராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பூநகரி மற்றும் கரைச்சி பிரதேசசபைகளை சிறீதரன் ஆதரவு தமிழரசுக்கட்சி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad