புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2025

கனடா செல்வதற்கு 80 இலட்சம் ரூபாவை கொடுத்து ஏமாந்தவர் உயிரை மாய்த்தார்! [Wednesday 2025-07-16 07:00]

www.pungudutivuswiss.com


கனடா செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.  புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா லிபாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடா செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா லிபாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த நபர் கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 80 இலட்சம் ரூபா பணத்தினை கொழும்பில் உள்ள முகவரிடம் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் தனது பணத்தினை மீள வழங்குமாறு தொடர்ச்சியாக முகவரிடம் கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணத்தை கேட்டவேளை அந்த பணம் ஒன்லைனில் களவாடப்பட்டதாக முகவர் கூறியுள்ளார். இதனால் விரக்தியில் நேற்றுமுன்தினம் இரவு (14) அரளிவிதையை அரைத்து குடித்துவிட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் நேற்று காலை வாந்தி எடுத்துவிட்டு மனைவியிடம் நடந்தவற்றை கூறினார். பின்னர் அவர் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

ad

ad