புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2025

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய வேண்டும் - தாயார் உருக்கமான வேண்டுகோள்! [Friday 2025-07-25 07:00]

www.pungudutivuswiss.com


இரண்டு பிள்ளைகளும் நான் இறந்தால் அனாதைகளாகிவிடும் அதனால் எனது மகன் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும்என அவரின் தாயார் உருக்கமான வேண்டுகோளொன்றை  விடுத்துள்ளார்

இரண்டு பிள்ளைகளும் நான் இறந்தால் அனாதைகளாகிவிடும் அதனால் எனது மகன் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும்என அவரின் தாயார் உருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்

யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவி;க்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குரலற்றவர்களின் குரல் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சிறைக் கூடங்களை காட்சிப்படுத்தப்பட்டு சிறையிலுள்ளவர்களின் உறவுகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அவர் மேலும் தெரிவித்ததாவது

நான் கடைசியாக ஜூலை மாதம் 17ம் திகதி அவரை போய்பார்த்துவிட்டு வந்தனான்,அவருக்கு வழக்கு நடந்துகொண்டிருக்கு, வழக்கில் என்ன முடிவு வரும் என்று தெரியாது.அவருக்கு ஒரு நல்ல முடிவு வரும் என சொல்லியிருக்கினம்,ஆனால் எனது மகன் இல்லாமல் கஷ்டம்,நான்தான் இந்த பிள்ளைகளை படிப்பித்து வளர்த்துக்கொண்டிருக்கின்றன், இனி எனக்கு வயசும் போயிட்டுது.கண்ணும் விளக்கமில்லை, நெடுக வருத்தம்.

ஆனமுறையிலை,இவர்களிற்கு எந்தவொரு உதவியும் வேண்டாம், அப்பாவின் ஆதரவுதான்வேண்டும்,

எனக்கு இருப்பது ஒரேயொருமகன்தான், அவரை விட்டால் வேறு பிள்ளைகளும் இல்லை,அதனால் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும் என கோரித்தான் நான் இங்கே வந்திருக்கின்றேன்.

இரண்டு பிள்ளைகளும் நான் இறந்தால் அனாதைகளாகிவிடு;ம் அதனால் எனது மகன் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும்.

ஆனந்த சுதாகரன் தற்போது உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்,அவரை கொண்டுபோய் போகம்பரை சிறைச்சாலையில் வைத்திருக்கினம், 15 வருடங்களாக மகசின் சிறைச்சாலையில் இருந்தவர்.

தற்போது போகம்பரை சிறைச்சாலையில் உரிய வசதிகள் இல்லை ,கடும் மன அழுத்தத்தில் சிக்குண்டவர் போல காணப்படுகின்றார், பார்ப்பதற்கு மிகவும் கவலையாக உள்ளது.

கடந்த 19 ம் திகதி அவரை பார்த்துவிட்டு வந்தேன் அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் தெரிவித்தார்.அது எனக்கு பெரும்மனகுழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.யாரை கேட்பது என தெரியவில்லை.

மனித உரிமை குழுவிடம் தெரிவித்தேன் அவர்கள் தற்போதுதானே வழக்கு முடிந்தது அடிக்கடி போய்வராதீர்கள் உங்களிற்கு தூரம் என்றார்கள்.

தூரம் என்பதற்காக என்னால் விட்டுவிட்டு இருக்க முடியாது,மனக்குழப்பமாக உள்ளது பிள்ளைகள் இருவரும் அம்மாவும் அப்பாவும் இல்லாத நிலையில் இருக்கின்றார்கள்.

பிள்ளைகள் தாய்பாசமோ தந்தை பாசமோ இல்லாமல் இருக்கின்றார்கள், அன்பாய் அரவணைக்க யாரும் இல்லை.

ad

ad