இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது |