புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2025

சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள்! [Monday 2025-07-21 07:00]

www.pungudutivuswiss.com


சம்பூர் கடற்கரையை அண்மித்த சிறுவர் பூங்கா பகுதியில் நேற்று கண்ணிவெடி நிறுவனத்தினர் அகழ்வில் ஈடுபட்ட போது மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சம்பூர் கடற்கரையை அண்மித்த சிறுவர் பூங்கா பகுதியில் நேற்று கண்ணிவெடி நிறுவனத்தினர் அகழ்வில் ஈடுபட்ட போது மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இப்பகுதியில் மெக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் சென்ற 18 ந் திகதி முதல் முகாமிட்டு அகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்றுக் காலை அகழ்வின் போது மேற்படி மனித எலும்பு எச்சங்கள் வெளிப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.பஸ்லீம் அகழ்வு பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார்.

அத்துடன் பிரதேசத்திற்கு முழுமையாக பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறும் மேலும் நீதிபதி,சட்டவைத்திய அதிகாரி,தடயவியல் அதிகாரிகள்,புவிச்சரிதவியல் அதிகாரிகள்,தொல்பொருள் திணைக்கழக அதிகாரிகள்,பொலிஸார் முன்னிலையில் எதிர் வரும் 23 ந் திகதி முழுமையான அகழ்வு பணிகள் நடைபெற வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மனித எச்சங்கள் கிடைத்துள்ள இடத்தில் இருந்து 40 மீற்றர் தூரத்தில் சம்பூர் படுகொலை நினைவுத் தூபி அமைந்துள்ளது.

ad

ad