மாணவர்களை ஜேர்மனியை தெரிவு செய்ய வைக்கும் காரணங்கள்: உலக தரப்படுத்தலில் இடம்பிடிக்கும் பல்கலைக்கழகங்கள் குறைந்த கல்விச் செலவுகள் உயர்ந்த தரமான வாழ்க்கை சிறந்த வேலை வாய்ப்புகள் கலாச்சார ஒவ்வுமை கொண்ட மாணவர் சூழ்நிலை QS 2026 சிறந்த மாணவர் நகரங்கள் - ஜேர்மனியின் டாப் 3 1. மியூனிக் (Munich) – உலக தரவரிசை: 4 Technical University of Munich (QS rank: 22) Ludwig-Maximilians-Universität München (QS rank: 58) மியூனிக் உயர்ந்த வாழ்க்கைச் செலவுகளை கொண்டிருந்தாலும், அதன் தொழில்துறை வளம் (BMW, Allianz, Deloitte, Accenture) மற்றும் வாழ்நிலை தரம் சிறந்ததாக உள்ளது. 2. பெர்லின் (Berlin) – உலக தரவரிசை: 7 Freie Universität (QS Rank: 88) Humboldt Universität (QS Rank: 130) Technische Universität Berlin (QS Rank: 145) QS மதிப்பீட்டில் பெர்லின்: Student View: 100 Student Mix: 77.6 Employer Activity: 85.5 Desirability: 84.2 பெர்லின் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரமும், விலைகுறைந்த வாழ்க்கை செலவுகளும், சிறந்த கல்வி சூழலும் கொண்ட நகரமாக விளங்குகிறது. 3. ஸ்டுட்கார்ட் (Stuttgart) – உலக தரவரிசை: 119 Universität Stuttgart (QS Rank: 355) University of Hohenheim (QS Range: 801–1000) Desirability ரேங்கிங்கில் Stuttgart உலகளவில் 26வது இடத்தில் உள்ளது. தொழில்துறைக்கும், கல்விக்கும் சிறந்த இணைப்பாக விளங்குகிறது. டியூஷன் கட்டணம் இல்லை! ஜேர்மனியில் உள்ள பெரும்பாலான மாநில (public) பல்கலைக்கழகங்களில், பிற நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கும் டியூஷன் கட்டணமில்லை, இது ஒரு முக்கிய வரப்பிரசாதமாகும். |