விழுந்து கிடந்த இளைஞனை உறவினர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் செல்வச்சந்திரன் மிமோஜன் வயது 27 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கால் பாதத்தில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. |