“இது, இஸ்ரேலின் இன அழிப்புக்கு கனடா தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதைக் காட்டும் தெளிவான ஆதாரம்” என பாலஸ்தீன இளைஞர் இயக்கத்தின் யாரா ஷௌஃபானி கூறியுள்ளார். 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத பதிவில் மட்டும் 1.75 லட்சம் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் மேலும் 15,000 ஆயுத பாகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. Montreal - Tel Aviv இடையே கார்ட்ரிட்ஜ்கள் மூன்று முறை அனுப்பப்பட்டுள்ளன. இது General Dynamics OTS, Quebec நிறுவனத்துடன் தொடர்புடையது என்று குறிப்பிடப்படுகிறது. “இஸ்ரேலுக்கு காசா போரில் பயன்படுத்தக்கூடிய புதிய அனுமதிகள் ஏதும் வழங்கப்படவில்லை” என கனடா அரசு தெரிவித்துள்ளது. ஆனால், 164 ஏற்றுமதி அனுமதிகள் இன்னும் செல்லுபடியாக உள்ளன என்பது மோசமான மறைப்புத் தன்மையை காட்டுகிறது. இந்த விவகாரம் கனடா அரசின் தொழில்துறை ஆதாயம் மற்றும் வெளிநிலை நீதிக்கேடான இரட்டை முகங்களை வெளிப்படுத்துகிறது. |