எனினும் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், செப்டம்பரில் பஸ்தீனத்தை அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் சர்வதேச நிவாரணங்கள் மற்றும் மனிதநேய உதவிகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். காசா மீது தாக்குதல் நிறுத்த வேண்டும் எனவும், நீடித்த சமாதான வழிமுறையில் இணைந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்ததுள்ளார். எல்லா சிறை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் பிராந்திய ஆட்சி திட்டத்தில் இருந்து விலக வேண்டும் எனவும் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் ஹமாஸ் கோரியுள்ளது. இதேவேளை, மேற்கத்திய நாடுகளின் இந்த அணுகுமுறையை “தீவிரவாத அமைப்பான ஹமாஸுக்கு பரிசு அளிப்பது போல” என இஸ்ரேல் பிரதமர் கடுமையாக விமர்சித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மக்ரோன் கடந்த வாரம், செப்டம்பரில் பஸ்தீன அரசை அங்கீகரிக்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்ததிலிருந்து. |