அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது. அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் முதலாவதாக அடையாளப்படுத்தப்பட்ட இடத்திலே மூன்று மனித என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை நாளை (04) மேலும் செம்மணியில் தற்போதுள்ள 2 மனித புதைகுழிகளை விட அயலில் மேலும் மனித புதைகுழிகள் உள்ளனவா என்பதனை ஆராயும் நோக்கில், ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 05 ஆம் திகதி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காணும் வகையில் அவற்றை மக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. |