“மாலை 8.30 மணி (GMT 18:30) முதல் இரண்டு முதல் மூன்று அடையாளம் தெரியாத ட்ரோன்கள் விமான நிலையத்தின் மேல் பறந்ததால் வான்வழி மூடப்பட்டுள்ளது. எந்த விமானமும் புறப்படவோ தரையிறங்கவோ முடியாது” என விமான நிலைய பேச்சாளர் லிஸ் ஆகெர்லே குர்ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.
மூன்று அல்லது நான்கு பெரிய ட்ரோன்கள்” விமான நிலையத்தின் மேல் பறந்ததாகவும், அவை தொடர்ந்து அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவை சாதாரண மக்கள் வாங்கக் கூடிய சிறிய ட்ரோன்கள் அல்ல, மிகவும் பெரியவை என விமான நிலைய கடமை அலுவலர் அனெட் ஓஸ்டென்ஃபெல்ட் குறிப்பிட்டார்.
நிலையை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை விமான நிலையம் மூடப்பட்டே இருக்கும் என்றும், மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து நேரக் கணிப்பு இல்லை என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம், சமீபத்தில் பல ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யா மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழி மீறல்கள் தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ள நேரத்தில் ஏற்பட்டுள்ளது.
எஸ்டோனியா, போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் ரஷ்யா போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் நுழைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு பேரவையிலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ கூட்டணி, “ரஷ்யாவின் அசட்டையான நடவடிக்கைகள் நேரடி மோதலுக்கே வழிவகுக்கும் அபாயம் உள்ளது. எங்களின் வான்வழி மற்றும் நிலப்பரப்பை பாதுகாக்க எப்போதும் தயாராக உள்ளோம்” என்று எச்சரித்துள்ளது.