ஊடகவியலாளரை வெளியேற்றி விட்டு யூரியூப்பரை அனுமதித்த அதிபர்! [Tuesday 2025-09-23 07:00] |
![]() விமானப்படையினால் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் மேற்கொண்ட விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவு தினம், நேற்று இடம்பெற்ற போது, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை |
வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதி அளிக்கவில்லை என காரணம் காட்டி ஊடகவியலாளர்களை அதிபர் வெளியேற்றினர். இது தொடர்பாக வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளரிடம் ஊடகவியலாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது தன்னால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்றும், பாடசாலை அதிபரிடம் தான் அனுமதிக்குமாறு தொலைபேசியில் தெரிவிப்பதாக தெரிவித்த நிலையில் நாகர்கோவில் மகா வித்தியாலய அதிபரால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், அதிபரின் உறவினரான யூரியூப்பர் ஒருவர் நினைவேந்தல் நிகழ்வுகளை காணொளி பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார். |
-
23 செப்., 2025
www.pungudutivuswiss.com