காற்றாலை வாகனங்களை தடுத்த மக்கள் மீது பொலிஸ் தாக்குதல்- பலர் படுகாயம்! [Saturday 2025-09-27 08:00] |
![]() மன்னாரில் நேற்று இரவு 10 மணி முதல் காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில், பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்திருக்கின்றனர். |
மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்சியாக போராடிவருகின்ற நிலையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கான முயற்சி இடம் பெற்றது. இந்த நிலையில் குறித்த காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை போராடி அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் பலர் காயம் அடைந்தை நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். |
-
27 செப்., 2025
www.pungudutivuswiss.com