-

9 அக்., 2025

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து

www.pungudutivuswiss.com
முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட 
வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா,  முன்னாள் ஜனாதிபதி  மகிந்தவை தூக்கிலிட வேண்டும் என அண்மையில் கருத்து வெளியிட்டு இருந்தார்.


சரத் பொன்சேகாவை நம்பிய மகிந்த 

இந்த கருத்து தொடர்பில் ஊடகங்களிடம் விமல் வீரவன்ச தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். 

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து | Mahinda Must Be Hanged   

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து விமல் வீரவன்ச கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.    

சரத் பொன்சேகா போன்ற ஓர் மோசமான நபரை ஓய்வு பெற்றுக் கொள்வதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இராணுவ தளபதியாக நியமித்தமைக்காகவே மகிந்தவை தூக்கிலிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து | Mahinda Must Be Hanged

இவ்வாறான மோசமான ஓர் நபருடன் இணைந்து யுத்தத்தை வழி நடத்தியமை தொடர்பில் மகிந்தவிற்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

பொன்சேகா போன்ற தீயவர்களுக்கு  சந்தர்ப்பம் வழங்கியமைக்காக மகிந்த தண்டிக்கப்பட வேண்டியவரே என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ad

ad