இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வரும் நிலையில், விடுவிக்கப்பட வேண்டிய பணயக்கைதிகளின் பெயர் பட்டியலை இருதரப்பினரும் பரிமாறிக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது 48 இஸ்ரேலியர்கள் ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
6ஆம் திகதி முதல்
கடந்த 6ஆம் திகதி முதல் எகிப்தின் ஷர்ம் எல் ஷெயிக் நகரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மூலோபாய விவகாரங்கள் அமைச்சர் ரோன் டெர்மர் இன்று கலந்து கொள்ள இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே பணயக்கைதிகளின் பெயர் பட்டியலை இருதரப்பினரும் பரிமாறிக் கொண்டுள்ளனர்