ஆனால், உக்ரைனிலிருந்து அடைக்கலம் கோரி வந்தவர்களுக்கு மட்டும் இதற்கான விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மாற்றங்கள் குறித்து ஆலோசனைக்கு அனுப்பப்பட்டதாகவும், எதிர்வரும் பெப்ரவரி 5 வரை கருத்துகள் பெறப்படுவதாகவும் சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
மிகுந்த அவசரமான மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளில் — உதாரணமாக நெருங்கிய உறவினர் மரணம் அல்லது தீவிர நோய்வாய்ப்பட்ட நிலை போன்றவற்றில் மட்டுமே — பயண அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகல்வு செயலாளர் அலுவலகம் (SEM) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இது, 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் நிறைவேற்றிய வெளிநாட்டினர் மற்றும் ஒருங்கிணைப்பு அல்லது நாட்டுக்குள் உள்வாங்கும் சட்ட திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் ஒரு கட்டமாகும்.
எனினும், 2022 மார்ச் மாதத்தில் உக்ரைனியர்களுக்கான S பாதுகாப்பு நிலை (S-protection status) அறிமுகப்படுத்தப்பட்டதாலும், அவர்களுக்கு பயண சுதந்திரம் வழங்கப்பட்டதாலும், இந்த சட்டங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அதனால், நீதி மற்றும் காவல் துறை (FDJP) புதிய விதிமுறைகளை உருவாக்கி, S பாதுகாப்பு நிலை பெற்றவர்களுக்கு சிறப்பு விதிகள் கொண்ட செய்தியை வெளியிட்டுள்ளது.
உக்ரைனிலிருந்து தஞ்சம் அடைந்தவர்கள் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து பயணம் செய்யலாம். இதற்காக அரசு புகலிடச் சட்டத்தில் (Asylum Act) சிறப்பு விதிவிலக்கைச் சேர்க்க முடிவு செய்துள்ளது.
ஆனால் மற்ற தஞ்சம் தேடுபவர்கள் மற்றும் தற்காலிக அனுமதி பெற்றவர்களுக்கு வெளிநாட்டு பயணங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவுள்ளன.
மேலும், அக்டோபர் 8 அன்று அரசு எடுத்த முடிவின்படி, S பாதுகாப்பு நிலை பெற்றவர்கள் இப்போது உக்ரைனில் ஆறு மாதத்திற்கு 15 நாட்கள் தங்க அனுமதி பெறலாம். இதற்கு முன்பு அது மூன்று மாதத்திற்கு 15 நாட்களாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது