பதிலுக்கு நேட்டோ பால்டிக் விமானப் பொலிசாரின் ஸ்பானிஷ் யூரோஃபைட்டர் டைபூன் போர் விமானங்கள் விரைந்து சென்று அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் லிதுவேனியா இராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்ய இராணுவ விமானங்கள் லிதுவேனிய வான்வெளியை அத்துமீறி நுழைந்தன. இது சர்வதேச சட்டம் மற்றும் லிதுவேனியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறுவதாகும் என அந்த நாட்டின் ஜனாதிபதி Gitanas Nausėda தெரிவித்துள்ளார். ஆனால், லிதுவேனியாவின் வான்வெளியில் எந்த மீறல்களையும் நடத்தவில்லை என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. |