இந்தநிலையில், இஷாராவின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கில் பணம் இல்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், அவருக்கு வேறு ஏதேனும் வங்கிக் கணக்குகள் உள்ளதா? என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு உந்துருளி மற்றும் சிற்றூர்ந்து போன்ற வாகனங்களை செலுத்த முடியும் என்பதை, இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவில் ஒப்புக்கொண்டுள்ளார். |