-

18 அக்., 2025

சுவிஸ் பள்ளிகளில் பிற மாகாண பிள்ளைகளுக்கு இடம் கிடையாது: கல்வி ஆணையம் உறுதி! [Saturday 2025-10-18 18:00]

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள பள்ளிகளில், பிற மாகாண பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் சுவிஸ் மாகாணமொன்று எடுத்துள்ள முடிவை மாகாண கல்வி ஆணையம் உறுதி செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் சுமார் 2,500 பேர் ஜெனீவா மாகாணத்தில் வாழ்பவர்கள் அல்ல.

உண்மையில், அவர்களில் பெரும்பாலானோர் பிரான்சிலிருந்து வந்து ஜெனீவாவில் படிப்பவர்கள்.

இந்நிலையில், அடுத்த ஆண்டிலிருந்து, ஜெனீவாவுக்கு வெளியே இருந்து வரும் மாணவ மாணவியரை ஜெனீவா பள்ளிகளில் சேர்ப்பதில்லை என ஜெனீவா மாகாண கவுன்சில் முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், மாகாண கவுன்சிலின் முடிவை கல்வி ஆணையமும் உறுதி செய்துள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டிலிருந்து ஜெனீவாவுக்கு வெளியே இருந்து வரும் மாணவ மாணவியர் ஜெனீவா பள்ளிகளில் சேர்க்கப்படமாட்டார்கள் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.

ad

ad