இந்தப் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர். முன்பதாக ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப் படுத்துமாறும், தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு மற்றும் பழிவாங்கல் காணப்படுவதுடன் அரசாங்கத்தின் கீழ் சில அதிகாரிகள் அவர்களின் சுயலாபத்துக்காக செயற்படுவதை நிறுத்துமாறும் கோரியே தாம் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர். |