இலங்கை கடற்படையினர் குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் தற்போது தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். பாதுகாப்புத் தரப்பினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்த மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த படகிலிருந்து 15 போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் 300 கிலோ ஹெரோயின், 02 துப்பாக்கிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |