எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் திலித் ஜயவீரவின் எங்கள் மக்கள் சக்தி கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இன்றைய பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. மூன்று பிரதான விடயங்களை வலியுறுத்தி இந்த பேரணி இடம்பெறவுள்ளது. அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் என என்ற தொனிப்பொருட்களின் கீழ் இந்த பேரணி இடம்பெறவுள்ளது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேரணியில் தான் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தான் நிச்சயமாக பேரணியில் கலந்துகொள்வதாகவும், இந்த நிகழ்வுக்கு பெருந்திரளான மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்கேற்பு குறித்து வினவியபோது, இந்தப் பேரணி தொடர்பாக அந்தக் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இந்த பேரணியில் பெருமளவான மக்கள் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். அரசாங்கத்துக்கு எதிராக எழுந்து நிற்பதற்கு இந்தப் பேரணி முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார். |