அமெரிக்காவும் இந்த சமாதான பேச்சு வார்த்தைகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் இந்த சமாதான திட்டம் தொடர்பில் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உக்கரையனின் பாதுகாப்பு பேரவை பிரதானி ரௌஸ்டெம் உமேரோவ் இந்த பேச்சு வார்த்தைகள் தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
எனினும் இந்த சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சுவிட்சர்லாந்தில், உக்ரேன் மற்றும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையில் சமாதானத் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரேனின் நலன்களை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.