-

24 நவ., 2025

பிரித்தானிய நடுவீதியில் முற்றுகையிடப்பட்ட டில்வின் சில்வாவின் வாகனம்.. பொலிஸார் குவிப்பு

www.pungudutivuswiss.comதேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 

அதன் பொருட்டாக ஒரு கூட்டம், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த

நிலையில், டில்வின் சில்வாவுக்கு எதிராக தமிழர்கள் நூற்று கணக்கில் கூடி போராட்டம் நடத்தினார்கள்.

அந்த போராட்டத்தையும் மீறி டில்வின் சில்வா கூட்டத்திற்குள் நுழைய முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அவர் உள்ளே சென்றுள்ள நிலையில் அங்கிருந்த தமிழர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில், குறித்த இடத்தில் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

முதலாம் இணைப்பு 

லண்டனில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு எதிராக மிகப்பெரிய கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது லண்டன் வெம்பிளியில் இன்றையதினம் (23) பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாஹ் - ஹமாஸிற்கு எதிராக தொடர்ந்தும் தாக்குதல்: இஸ்ரேலின் எச்சரிக்கை

ஹிஸ்புல்லாஹ் - ஹமாஸிற்கு எதிராக தொடர்ந்தும் தாக்குதல்: இஸ்ரேலின் எச்சரிக்கை

கண்டன போராட்டம்

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்கு விஜயமொன்று மேற்கோண்டுள்ளார்.

பிரித்தானிய நடுவீதியில் முற்றுகையிடப்பட்ட டில்வின் சில்வாவின் வாகனம்.. பொலிஸார் குவிப்பு | London Visit Tilvin Silva Tamil Diaspora Protest

இன்று பிற்பகலில் லண்டன் அல்பேட்டன் பகுதியில் உள்ள பாடசாலையில் புலம்பெயர் இலங்கையர்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதனை எதிர்த்தும், திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம், சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டமை இதற்கு மூல காரணமாக டில்வின் சில்வா செயற்பட்டார் என்று புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி இந்த போராட்டதை முன்னெடுத்துள்ளனர்.

ad

ad