-

18 நவ., 2025

சுவிட்சர்லாந்தின் சமஷ்டி முறை இலங்கையில் அதிகாரப் பகிர்விற்கு பொருந்துமா

www.pungudutivuswiss.com
பல தசாப்தங்களாக தமிழ் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சமஷ்டி முறையில் ஆட்சி நடத்தப்படும் நாடுகள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர். சுவிட்சர்லாந்தின் அரசியல் முறைமை தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்கில் அண்மையில் இலங்கை அரசியல்வாதிகள் சிலர் சுவிட்சர்லாந்திற்கு கல்வி சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

சுவிட்சர்லாந்தில் அனைத்தும் கீழிருந்து மேல் என்ற கட்டமைப்பில் வடிவமைகக்ப்பட்டுள்ளமை சுவாரஸ்யமான விடயமாகும் என சுவிஸ் விஜயம் மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சி குறிப்பிடுகின்றார்.

சுவிட்சர்லாந்தில் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது மக்களின் கருத்து கேட்டறியப்படுகின்றது. சாலையொன்றை நிர்மானிப்பதற்கு உள்ளுராட்சி மன்றம் விரும்பினாலும் மக்கள் அது தேவையில்லை என்றால் அந்த சாலை நிர்மானிக்கப்படாது. மக்களின் ஆணைக்கி ஏற்பவே இந்த தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

12 அரசியல்வாதிகள் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்த பிரதிநிதிகள் குழு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தது.

வெளிவகார அமைச்சு இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது.

ஜெனீவா, சூரிச்மற்றும் சிறிய நகரங்களான மோர்டன் போன்ற சில இடங்களுக்கு இந்த பிரதிநிதிகள் குழு விஜயம் செய்திருந்தது.

சமஸ்டி முறை எவ்வாறு பல்வேறு அரசியல் மட்டங்களில் சுவிட்சர்லாந்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் அனேகமான தீர்மானங்கள் தலைநகர் கொழும்பில் எடுக்கப்படுகின்றது.

இதேவேளை, சிறுபான்மை தமிழ் சமூகத்தினர் சமஸ்டி முறையில் ஆட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கை பிரிவினையை ஏற்படுத்தும் என சிங்கள பெருபான்மையே சமூகத்தினர் கருதுகின்றனர்.

இலங்கையில் இன முரண்பாடுகள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சி காலத்தில் இருந்தே காணப்படுகின்றது.

காலனித்துவ இலங்கையில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் அரச நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புக்களுக்கு தமிழ் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களை நியமித்தனர்.

இதன் காரணமாக பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மத்தியில் பிரிவினைவாத எண்ணங்கள் தொடர்ச்சியாக காணப்பட்டது.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் சிங்கள அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான குடியுரிமை நிராகரித்து இருந்தது.

பின்னர் தனிச் சிங்கள மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சில சிங்கள பெரும்பான்மை பிரதிநிதிகள் சமஸ்டி முறைமை குறித்து குரல் கொடுத்திருந்தாலும் அதன் பின்னர் தமிழ் சிறுபான்மையினரின் பிரதான அபிலாஷையாக இந்த சமஷ்டி முறை காணப்படுகின்றது.

இந்து மதத்தை பிரதானமாகக் கொண்ட தமிழர்களுக்கும் பௌத்த மதத்தை பிரதானமாகக் கொண்ட சிங்களவர்களுக்கும் இடையில் சிவில் போர் நடைபெற்றது.

இந்த போரில் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர், 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையில் இந்தப் போர் இலங்கையில் நீடித்தது தமிழீழ விடுதலை புலிகள் சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக போர் புரிந்தனர்.

வடக்கு கிழக்கில் சுதந்திர தனி நாட்டு கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ வெற்றியாக மட்டுமே நிறைவடைந்தது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்தின் சமஸ்டி ஆட்சி முறைமை ஓர் சிறந்த மாதிரியாக காணப்படும் என பல்வேறு காலங்களில் பேசப்பட்டது.

1985 ஆம் ஆண்டு மாக்ரா நிறுவனம் கொழும்பில் சமஷ்டி ஆட்சி முறை குறித்து ஓர் கருத்தரங்கை நடத்தியிருந்தது.

இந்த கருத்தரங்கில் சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் உரையாற்றி இருந்தனர்.

இந்த கருத்தரங்கு மிகப்பெரிய வெற்றி அளித்ததாக அப்போது பேசப்பட்டது.

அந்த காலப்பகுதியில் அந்த ஊடகங்களில் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த கருத்தரங்கிற்கு இலங்கையின் உள்ளூர் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம் இந்த கருத்தரங்கு குறித்த செய்தியை சேகரிப்பதற்கு உள்ளுர் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை.

கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் அரசாங்க படையினருக்கும் இடையிலான போர் இடைநிறுத்தப்பட்டு போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.

தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர், சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகருக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த காலப்பகுதியில் அவர் தனி தமிழீழ கோரிக்கை முன்வைக்கவில்லை மாறாக சமஸ்டி ஆட்சி முறையின் கீழ் அதிகார பகிர்வு அதாவது மத்திய அரசாங்கத்திற்கும் பிராந்திய நிர்வாகங்களுக்கும் இடையில் அதிகார பகிர்வு குறித்து அவர் தனது கருத்துக்களை முன் வைத்திருந்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தமிழீழ விடுதலைப்புலி பிரதிநிதிகளை சந்தித்திருந்தனர்

ஓராண்டகாலத்தின் பின்னர் நோர்வேயின் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மிச்சலின் கெல்மி ரே, இலங்கை அரசாங்கப்பிரதிநிதிகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த சமாதான முனைப்புக்கள் தோல்வியடைந்ததுடன், இந்த போர் 2009 ஆம் ஆண்டு வரையில் நீடித்தது.

போர் நிறைவின் பின்னர் கடந்த 2024 ஆம் ஆண்டு வரை ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்திய ராஜபக்ச குடும்பத்தினர் சமஸ்டி ஆட்சி முறைக்கு விரோதமான கொள்கைகளை முன் வைத்திருந்தனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டது. நாடாளுமன்ற தேர்தலில் 150 க்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் இந்த கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருந்தனர்.

இந்த உறுப்பினர்களில் சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்த ஹெட்டியாரச்சியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனேகமான கடந்த கால அரசாங்கங்கள் தங்களது அரசியலை இனவாத அடிப்படையில் முன்னெடுத்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் தங்களது கலாச்சாரம் மொழி பல்வகைமைகளை உறுதி செய்யக்கூடிய ஓர் ஆட்சி முறையை நாம் உருவாக்குவோம் என அவர் தெரிவிக்கின்றார்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் செய்யும் 19 உறுப்பினர்களில் எட்டு உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் எனவே குறித்த பகுதியில் பெரும்பான்மை பலம் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்ததாக கருத முடியாது.

தேசிய மக்கள் சக்தி ஏன் பிரதான பங்காளி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கடும் சிங்கள தேசியவாத இடது சாரி கொள்கைகளை பின்பற்றும் ஓர் ஓர் கட்சியாகும்.

தேர்தல் வெற்றி என் பின்னால் ஜே.வி.பி கட்சியை சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இலங்கை வந்து சந்தித்து இருந்தனர்.

நீண்ட கால அரசியல் நட்புறவை உறுதி செய்து கொள்ளும் வகையில் இந்த விஜயம் அமைந்திருந்தது என சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது.

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்கமையும் சீன பிரதிநிதிகள் சந்தித்திருந்தனர்.

சுவிஸ் கல்விச் சுற்றுலாவில் அபேசிங்கவும் இணைந்து கொண்டிருந்தார்.

சுவிட்சர்லாந்தில் காணப்படும் அரசியல் ஆட்சி நிர்வாக முறை முரண்பாடற்றது என அவர் புகழாரம் சூட்டிய அவர், சில விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் மந்த கதி காணப்படுவதாக சுட்டிக் காட்டுகின்றார்.

இலங்கையிலும் இணக்கப்பாடுடன் கூடிய அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும் என அவர் தனது விருப்பத்தை வெளியிட்டார்.

இலங்கையில் பல் மொழி சமூகத்தின் மத்தியில் சகோதரத்துவத்தை கட்டி எழுப்ப வேண்டிய அவசியம் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

மக்கள் ஏனைய சமூகத்தின் மொழியை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை எதிர்வரும் ஆண்டில் இலங்கையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெட்டியாரச்சி குறிப்பிடுகின்றார்.

எல்லை நிர்ணய முரண்பாடுகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிரமமான முறையில் இலங்கையில் மக்களின் பங்களிப்பினை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.

ஆட்சி நிர்வாக நடவடிக்கைகளில் மக்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசு சார்பற்ற நிறுவனங்கள், பொதுமக்கள் பள்ளிவாசல்கள், கோயில்கள் தேவாலயங்கள் விசாரிகளில் புதிய அரசியல் சாசனம் தொடர்பிலான பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

மேலும் இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் தரப்பில் கூறப்படுகின்றது.

புதிய அரசியல் அமைப்பு அவசியமானது என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் சத்தியலிங்கம் தெரிவிக்கின்றார்.

போர் இட்மபெற்ற காலத்தில் போர் வலயத்தில் மருத்துவராக கடமை ஆற்றிய சத்தியமூர்த்தி தற்பொழுது நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்கின்றார்.

இந்த கல்வி சுற்றுலாவில் இணைந்து கொண்ட  மூன்று தமிழ் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சத்திய லிங்கமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் காணப்படும் சமஷ்டி முறைமை பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிடுகின்றார்.

நகராட்சிகளில் தங்களுக்கே உரிய காவல்துறைகள் நிறுவப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறெனினும், இலங்கையில் மாகாண சபைகளுக்கு இறையாண்மை வழங்கப்படவில்லை எனவும் குறிப்பாக ஓர் காவல்துறை பிரிவை உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

அடிப்படையில் மாகாண சபை ஒன்றின் நிர்வாகத்தை எந்த ஒரு நேரத்திலும் கலைப்பதற்கு மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு எனவும் இது ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

சமஸ்டி முறையிலான அரசியல் சாசனம் ஒன்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் மக்கள் சமூகத்தினருக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பாக பல்வேறு இன சமூகங்களுக்கு இடையில் இந்த நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.

சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்தவர்களுக்கு தெரியும் சமஷ்டி முறைமை என்பது பிரிவினை வாதம் அல்ல என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறும் போது இங்கு கற்றுக்கொண்டதை மறந்துவிட வேண்டாம் என சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாட்டில் காணப்படும் ஆட்சி நிர்வாக முறைமை தொடர்பில் ஏனைய சக உறுப்பினர்களுக்கு தெளிவு படுத்துவார்கள் என தாம் நம்புவதாக குறிப்பிடுகின்றார்.

சிங்கள மக்கள் சமஸ்டி முறைமை நாட்டைப் பிளவடையச் செய்யும் என உறுதியாக நம்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயம் சாதகமான ஒன்றாக அமைய வேண்டும் என்றால் சுவிட்சர்லாந்து பிரதிநிதிகள் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் என்பன தொடர்ந்தும் இந்த ஆட்சி முறைமை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார்.

2000மாம் ஆண்டு ஆரம்ப பகுதியிலும் அவர் இவ்வாறு விஜயம் செய்திருந்தார்.

அவர் இலங்கையில் சமஸ்டி முறைமை கொண்டுவரப்பட்ட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக கனடாவில் காணப்படும் சமஸ்டி முறைமை அமுல்படுத்த வேண்டும் என தான் கூறியதாக குறிப்பிடுகிறார்.

சுவிட்சர்லாந்து சமஷ்டி முறைமை நமக்கு புதியது அல்ல எனவும் தாமும் தமது கட்சியும் சுவிட்சர்லாந்தின் ஆட்சி முறைமை குறித்து நீண்ட காலமாக ஆர்வமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஆட்சி நிர்வாக முறைமை சிறந்தது என்ற போதிலும் கனடிய முறையிலான மாகாண ஆட்சி முறைமை மேலும் வலுவானது என அவர் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் சமஸ்டி ஆட்சி முறைமை குறித்து நல்லெண்ணம் கிடையாது, கடந்த கால அரசாங்கங்களை விடவும் இந்த அரசாங்கத்திடம் தமிழர் விரோத கொள்கைகள் குறைவு என கூறபப்டுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கடந்த 76 ஆண்டுகளாகவே ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழர் விரோத கொள்கைகளை பின்பற்றி வந்ததாக அவர் தெரிவிக்கின்றார்.

தற்போதைய அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகள் எவ்வளவு தூரம் நிறைவேற்றப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் இதற்கு காலமே பதில் சொல்லும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த கல்வி சுற்றுலா வெற்றிகரமாக அமைந்தது என சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்குவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ad

ad