அதேபோல் மஹர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஜோன்சன் கொலின் வலன்ரினோ என்பவர் 17வருடங்களாகவும், தங்கவேலு நிமலன் 16வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வெலிக்கடைச் சிறைச்சாலையில் கிருஸ்ணசாமி இராமச்சந்திரன் என்பவர் 22வருடங்களாகத் தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், தும்பறை சிறைச்சாலையில் ஏ.எச்.உமர்கற்றப் என்னும் அரசியல் கைதி ஒருவரும் 16ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ளார்.
சிறைகளிலே தமது இனிமையான இளமைக்காலங்களைத் தொலைத்துவிட்டு, எஞ்சியுள்ள தமது வாழ்க்கைக் காலங்களையும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலேயே தொலைத்துவிடுவோமோ என்ற தமது விடுதலைக்கான ஏக்கங்களுடன் இவர்கள் காத்திருக்கின்றனர்.
============
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதனூடாக நல்லிணக்கத்தை வெளிப்படுத்துங்கள்; நீதி அமைச்சைக் கோரினார் - ரவிகரன் எம்.பி
நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் 10தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்வதனூடாக நல்லிணக்கத்தை வெளிப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நீதி மன்றும் ஒற்றுமைப்பாட்டு அமைச்சினைக் கோரியுள்ளார்.
அத்தோடு அரசியல் கைதியாக இருந்து விடுதலைசெய்யப்பட்டிருந்த திருமதி.செல்வக்குமார் சத்தியலீலா என்பவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் கடந்த 2023ஆம் அண்டு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பினை வழங்குமாறும் மேலும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றில் 17.11.2025இன்று இடம்பெற்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்மீதான குழுநிலை விவிதத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.
கடந்த போர்க்காலப்பகுதியில் தமது சமூகத்தின் உரிமைகளுக்காக குரல்கொடுத்ததற்காக பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின்கீழ் கடந்தகாலத்தில் தமிழ் மக்கள் பலரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவ்வாறு சிறை வைக்கப்பட்ட பலரும் விடுவிக்கப்பட்டிருந்தாலும், தற்போதும் 10 தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின்கீழ் 15தொடக்கம் 30ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர்.
அந்தவகையில் மகசின் சிறைச்சாலையில் ஆறு தமிழ் அரசியல்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கதிர்காமத்தம்பி சிவகுமார், விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் ஆகியோர் 30வருடங்களாகவும், சண்முகலிங்கம் சூரியகுமார், சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் ஆகியோர் 17வருடங்களாகவும், செல்வராஜா கிருபாகரன், தம்பையா பிரகாஷ் ஆகியோர் 16 வருடங்களாகவும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் மஹர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஜோன்சன் கொலின் வலன்ரினோ என்பவர் 17வருடங்களாகவும், தங்கவேலு நிமலன் 16வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வெலிக்கடைச் சிறைச்சாலையில் கிருஸ்ணசாமி இராமச்சந்திரன் என்பவர் 22வருடங்களாகத் தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், தும்பறை சிறைச்சாலையில் ஏ.எச்.உமர்கற்றப் என்னும் அரசியல் கைதி ஒருவரும் 16ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ளார்.
சிறைகளிலே தமது இனிமையான இளமைக்காலங்களைத் தொலைத்துவிட்டு, எஞ்சியுள்ள தமது வாழ்க்கைக் காலங்களையும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலேயே தொலைத்துவிடுவோமோ என்ற தமது விடுதலைக்கான ஏக்கங்களுடன் இவர்கள் காத்திருக்கின்றனர்.
இவர்கள் அனைவருமே சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அந்தக்குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கவேண்டிய இவர்கள் சிறைகளிலிருக்கும்நிலையில், அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.
தற்போது இந்தநாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியும், அதிகரித்த வாழ்க்கைச்செலவும் இந்தக் குடும்பங்களை மேலும் சிக்கலுக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளது.
அத்தோடு கடந்த 10ஆண்டுகளில் மட்டும் 11தமிழ் அரசியல்கைதிகள் இறந்துள்ள துயரங்களும் இடம்பெற்றுள்ளன. தற்போது சிறைகளிலுள்ள கைதிகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்காதுவிட்டால் அத்தகை அவலங்களே அரங்கேறும் வாய்ப்புக்களும் உள்ளன.
அரசியல் கைதிகளின் விடுதலை என்பது அவர்களின் துன்பங்களை மாத்திரமல்ல, அவர்களின் குடும்பங்களின் துன்பங்களையும் தணிக்கும். அத்தோடு அரசின் ஒற்றுமைப்பட்டிற்கான முயற்சியாகவும், நல்லிணக்கச் செயற்பாட்டிற்கான சமிக்ஞையாகவும் தமிழ் மக்களாலும் நோக்கப்படும்.
எனவே தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 அரசியல்கைதிகளையும் நல்லிணக்க அடிப்படையில் தாமதமின்றி விடுதலைசெய்ய இந்ந உயரியசபையினைக் கோருகின்றேன்.
இதேவேளை கடந்த 14ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் அரசியல் கைதியாக தடுப்புக்காவல் மற்றும் கடுங்காவல் சிறைத்தண்டனைகளை அனுபவித்து பின்னர் விடுதலைசெய்யப்பட்டிருந்த திருமதி.செல்வக்குமார் சத்தியலீலா என்பவருக்கு 2023ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பினை மறு ஆய்விற்குட்படுத்துமாறு அவர் உச்ச நீதிமன்றத்தையும் நாடியுள்ளார்.
எனவே விடுதலைசெய்யப்பட்டு தற்போது மரணதண்டனை வழங்கப்பட்டுள்ள சத்தியலீலாவிற்கு மனிதாபிமானப் பொது மன்னிப்பு வழங்குமாறும் கோருகின்றேன் - என்றார்.