ஐரோப்பிய நாடுகளை தாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை என தெரிவித்துள்ளார்.
சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில், அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் எங்களின் நலன்களை மதித்து, எங்களை மரியாதையுடன் நடத்தினால், இனி எந்த ‘சிறப்பு இராணுவ நடவடிக்கைகளும்’ இருக்காது” எனக் கூறினார்.
‘சிறப்பு இராணுவ நடவடிக்கை’ என்பது உக்ரைன் மீது நடத்தப்பட்ட முழுமையான படையெடுப்பை குறிப்பதாக அமைந்துள்ளுது.
மேலும், நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடைந்ததில் மேற்கத்திய நாடுகள் தங்களை ஏமாற்றியதாகவும், அந்த நிலைமாறாவிட்டால் எதிர்காலத்தில் ரஷ்ய ஆக்கிரமிப்புகள் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
1990ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைவதற்கு முன், மேற்கத்திய நாடுகள் நேட்டோ விரிவடையாது என வாக்குறுதி அளித்ததாக புடின் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறார்.
இதனை முன்னாள் சோவியத் தலைவர் மிகாயில் கோர்பச்சேவ் மறுத்திருந்தார்.
‘டயரக்ட் லைன்’ என அழைக்கப்படும் இந்த ஆண்டு இறுதி நேரலை நிகழ்ச்சி, பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கேள்விகளை இணைத்ததாக மாஸ்கோவில் நடைபெற்றது.
உக்ரைனின் கைப்பற்றப்பட்ட பகுதிகள் மற்றும் கிரிமியா உட்பட காட்டப்படும் பெரிய ரஷ்ய வரைபடத்தின் கீழ் அமர்ந்தபடி புதின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்தது.
நிகழ்ச்சி பெரும்பாலும் திட்டமிட்டதாக இருந்தாலும், சில விமர்சன கருத்துகள் பெரிய திரையில் தோன்றின. அதில் நிகழ்ச்சியை “சர்க்கஸ்” என குறிப்பிட்ட கருத்தும், இணைய சேவை தடை மற்றும் குடிநீர் தரம் குறித்த புகார்களும் இடம் பெற்றன.
இந்நிகழ்ச்சிக்குப் பின் சில மணி நேரங்களிலேயே, உக்ரைனின் தெற்குப் பகுதியான ஒடெஸா பகுதியில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் உயிரிழந்து, 15 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.