இந்நிலையில் வர இருக்கும் மேற்கு வாங்கம், மற்றும் தமிழக சட்டசபை தேர்தலில் தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு சேர்க்காது, மேலும் அங்கே திருனாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இவர்களுக்கு இடையில் தான் போட்டி நிலவி வருகிறது காங்கிரஸ் கட்சி மேற்கு வாங்க தேர்தல் ஆட்டத்திலே இல்லை.
இப்படி ஒரு சூழலில் மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக இம்முறை வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் உறுதி படுத்துகிறது. அந்த வகையில் வரும் தேர்தலில் மேற்கு வங்கத்தில் படுதோல்வி அடைந்து தமிழகத்தில் திமுக கொடுக்கும் 25 தொகுதிகளில் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி லெட்டர் பேட் கட்சியாக சுருங்கி விடும் என உணர்ந்த காங்கிரஸ் தலைமை.
மேற்கு வங்க தேர்தலில் நம்முடை படுதோல்வியை தடுக்க முடியாது, ஆனால் தமிழகத்தில் திமுக கொடுக்கும் 25 தொகுதியை வாங்கி கொண்டு போட்டியிடுவதை விட விஜய் உடன் கூட்டணி அமைத்தால் அதிக தொகுதியில் போட்டியிடலாம், வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கேட்கலாம் குறிப்பாக அதிமுக கூட்டணியில் பாஜக 40 தொகுதியில் போட்டியிட்டால், அதற்கு கீழே காங்கிரஸ் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை இருக்காது என்பதை உணர்ந்த காங்கிரஸ் தலைமை
வரும் தேர்தலில் தமிழகத்தில் விஜய் உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 41 தொகுதியை திமுக கொடுத்தால் கூட்டணியில் தொடரலாம், இல்லை என்றால் விஜய் பக்கம் செல்வதில் உறுதியாக இருக்கிறது காங்கிரஸ் டெல்லி தலைமை.
மேலும் ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் , பிரவின் சக்கரவர்த்தி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பலரும், தவெக கூட்டணியை விரும்புகின்றனர். காங்கிரஸ் மேலிட தலைவர்களின் விருப்பத்துடன், அக்கட்சியின் தகவல் பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, கடந்த 5ம் தேதி விஜயை சென்னை, பனையூரில் சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பு திமுகலைமயை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதனை தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய தங்கை கனிமொழி மூலம் விஜய் பக்கம் காங்கிரஸ் கட்சி செல்லவிடாமல் தடுக்க, சோனியா, மற்றும் ராகுல் காந்தியிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார், ஆனால் அதற்கு சோனியா மற்றும் ராகுல் தரப்பு எங்களுக்கு 60 தொகுதி வரை விஜய் ஒதுக்கி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிறார். ஆகையால் 41 தொகுதிக்கு குறைவில்லாமல் கொடுத்தால் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் , இல்லை என்றால் கை கொடுத்து நட்போடு பிரிக்கிறோம் என கனிமொழிக்கு பதில் கொடுத்து இருக்கிறது ராகுல் மற்றும் சோனியா தரப்பு என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
இந்நிலையில் சமீபத்தில் ராகுல் - விஜய் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலில், காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதி மற்றும் ஆட்சியில் பங்கு தருவதாக விஜய் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.