நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, *2026 ஆம் ஆண்டில் 5 - 13 வரையான தரங்களுக்கான பாடசாலை நேரம் மு.ப 7.30 முதல் பி.ப 1.30 வரை மாற்றமின்றி தொடரும். *அரச, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. *தரம் 6 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை 7 ஆகும். *ஒரு பாடவேளைக்காக 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும். *2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடு தரம் 1 மற்றும் தரம் 6 இற்கு நடைமுறைப்படுத்தப்படும். *கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் கீழ், தரம் 6 இற்கான கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2026 ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. *தரம் 1 இற்கான மாணவர்களை அறிமுகப்படுத்தும் செயற்பாடு 2026 ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், உத்தியோகபூர்வமாக கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும். *தரம் 1 இற்குரிய செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் தரம் 6 இற்குரிய கற்றல் தொகுதிகள் (Learning Modules), அந்தத் தரங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. *ஏனைய தரங்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் இதுவரையில் விநியோகித்து முடிக்கப்பட்டுள்ளன. *2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி 2026 ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது. *இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம் 2026 ஜனவரி 2 ஆம் திகதி வெளியிடப்படும் |