திமுகவின் சீனியர் அமைச்சர் கே.என். நேரு நிர்வகிக்கும் நகராட்சி நிர்வாகம்
மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஊழல் புகார்கள் வெடித்துள்ளன. அமலாக்கத்துறை (Enforcement Directorate) நடத்திய அதிரடி ஆய்வுகளில், சுமார் ₹1,020 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடுகள் மற்றும் ₹366 கோடி மதிப்பிலான பணியிட மாறுதல் ஊழல்கள் நடந்திருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, தமிழக டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத்துறை விரிவான அறிக்கைகளை அனுப்பி, உடனடியாக வழக்குப்பதிவு (FIR) செய்ய வலியுறுத்தியுள்ளது.
ஆனால் தமிழக பொலிசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. தலையை சொறிந்து கொண்டு இருக்க. ED வேறு வழியில் காய் நகர்த்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மூன்று விதமான முக்கியப் புகார்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்புவதில் தலா ₹25 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டாவதாக, அரசு ஒப்பந்தங்களை (Tenders) வழங்குவதில் சுமார் 7.5% முதல் 10% வரை கமிஷன் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
மூன்றாவதாக, சுமார் 340 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களின் 'ட்ரான்ஸ்பர்' (Transfer) மற்றும் போஸ்டிங்கிற்காக ₹7 லட்சம் முதல் ₹1 கோடி வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டியுள்ளது. அமைச்சர் நேருவுக்கு எதிரான இந்த 'Cash-for-jobs' புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (ஜனவரி 23, 2026) விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அமலாக்கத்துறையின் புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இந்த பிரச்சனை நீதிமன்றம் செல்லும் வரை ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை.
அமைச்சர் நேருவோ, "இந்த விவகாரங்கள் குறித்து எனக்கு முழுமையான விபரங்கள் இன்னும் தெரியவில்லை, விசாரணை நடந்து வருவதால் இப்போது எதுவும் சொல்ல முடியாது" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
ஏற்கனவே திமுக அமைச்சர்கள் சிலர் மத்திய ஏஜென்சிகளின் பிடியில் இருக்கும் நிலையில், நேரு மீதான இந்த அடுத்தடுத்த புகார்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமலாக்கத்துறை தனது பிடியை இறுக்கினால், அடுத்தடுத்த அதிரடி கைதுகள் நடக்குமா என்பதே தற்போதைய பெரிய கேள்விக்குறி!
