முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன் மீது 2011 ஆம் ஆண்டு தனது இராணுவ குழுவை வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
அதேபோல 2013 ஆம் ஆண்டு எனது காரியாலயத்தினுள் குண்டுகள் கொண்டுவந்து வைக்கப்பட்டு, இராணுவ ஒட்டுக்குழுவாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், உள்ளிட்டோர் அப்போது தவிசாளராக இருந்த வேழமாதிலனை கைது செய்து 13 மாதங்கள் சிறையில் அடைத்திருந்தனர்.
அதே ஆண்டு மே மாதம் அளவில் கிட்டத்தட்ட 500 பேர் வருகைத்தந்து எமது அலுவலகத்தை தாக்கினார்கள். அப்போது ஏன் தயாசிறி, சாமர சம்பத், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் கதைக்கவில்லை.
ஏன் இவர்கள் தற்போது என்னை இலக்குவைத்துள்ளனர். ஏதோ ஒருவகையில் என்னை அரசியலில் இருந்து அனுப்புவதே இவர்களின் இலக்காக உள்ளதெனவும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பூநகரியினில் சோலார் மின் உற்பத்தி நிலையமொன்றை திறக்க சி.சிறீதரன் மற்றும் அவர் மகன் இலஞ்சம் பெற்றதாக தென்னிலங்கை இனவாத தரப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றனர்.
இதனிடையே தன்மீது வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை உண்மையான சிங்கள பௌத்தனாக இருந்தால் நிரூபிக்கவும் தயாசிறி ஜெயசேகரவுக்கு எதிராக சவால் விடுத்துள்ளார்.