கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனின் விடயம் தொடர்பாக முக்கிய விடயம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரியநேத்திரனின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தற்போதுதான் அவருக்கு கடிதம் கிடைக்கப்பெற்று இருக்கிறது. பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் மூலமாக கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு முதல் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கவில்லை. கட்சியின் அரசியல் குழு கூடி குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தை நானும் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆகவே அவர் இப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றார். |