இலங்கை காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 மைல் தொலைவில்,
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ரகசியமாக 3 நாட்களாகப் பதுங்கியிருந்துள்ளது. இந்த விஷயத்தை இந்தியாவுக்கோ அல்லது இலங்கை புலனாய்வுத் துறைக்கோ அமெரிக்கா தெரியப்படுத்தவில்லை. ஈரானின் IRIS Dena போர்க்கப்பல், இந்தியாவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.பயிற்சியை முடித்துக்கொண்டு 180 பேருடன் அது ஈரான் திரும்பவிருந்தது. இந்த நிலையில், இந்தக் கப்பலைத் தாக்கி அழிக்க வேண்டும் என்று அமெரிக்கா திட்டமிட்டு, தனது நீர்மூழ்கியை இலங்கை நோக்கி அனுப்பியுள்ளது. இந்த விபரம் தெரியாத ஈரானிய போர்க்கப்பல், இலங்கைக்கு மிக அருகாமையில் பயணித்த வேளை, திடீரென Mark 48 torpedo ஏவுகணை மூலம் அந்தக் கப்பலைத் தாக்கி அழித்துள்ளது அமெரிக்கா.
சம்பவம் நடந்த சமயம், அவசர அலைவரிசையில் அவலக் குரல்கள் எழுப்பப்பட்ட நிலையில், இலங்கைக் கடற்படை விரைந்து சென்று 23 பேரை மீட்டுள்ளது. இதில் 80 பேர் உயிரிழந்துவிட்டனர்; மீதமுள்ள 77 பேரைக் காணவில்லை. அமெரிக்கா மிகவும் அதிநவீன, கடலுக்கு அடியில் சென்று தாக்கும் ஏவுகணையைப் பயன்படுத்தி கப்பலை முற்றாக அழித்து நீரில் மூழ்கடித்துள்ளது.
இந்திய உளவுத்துறைக்கு இந்த விஷயம் தெரியுமா? என்ற கேள்வி தற்போது பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. பொதுவாக, ஒரு நாடு மற்றொரு நாட்டை அழைத்து போர் ஒத்திகை அல்லது பயிற்சியில் ஈடுபட்டால், அந்த அண்டை நாட்டுக் கப்பல் பாதுகாப்பாகத் தனது நாடு திரும்ப வழிவகை செய்ய வேண்டும். ஆனால், ஈரான் மீது அமெரிக்கா பெரும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா இந்தக் கப்பல் செல்ல எப்படி அனுமதித்தது?
கடலில் பிணமாக மிதக்கும் இந்த ஈரானிய கடற்படையினர் மரணத்திற்கு இந்தியா எப்படி அனுமதி அளித்தது? இது தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவொரு கண்டன அறிக்கையையும் வெளியிடவில்லை. ஒரு வகையில் அமெரிக்காவிடம் கைகட்டி நிற்கும் நிலையில்தான் இந்தியாவும் இருக்கிறது. மேலும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் 3 நாட்களாக இந்தியக் கடற்பரப்பு அருகே நிற்பது இந்தியாவுக்கே தெரியாது என்றால், சீனாவின் கப்பல் வந்தால் இந்தியா அதனை எப்படி கண்டுபிடிக்கப் போகிறது என்ற கேள்விகள் எழுகின்றன அல்லவா? இந்தியாவின் பாதுகாப்பிலும் ஓட்டை இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.
