-

5 மார்., 2026

கட்டுநாயக்கவில் இருந்து டுபாய்க்கு 4 விமானங்கள்! [Thursday 2026-03-05 05:00]

www.pungudutivuswiss.com


கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புதன்கிழமை  04 விமான சேவைகள் இயக்கப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புதன்கிழமை 04 விமான சேவைகள் இயக்கப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

  

அதன்படி, புதன்கிழமை (04) பிற்பகல் 01:34 மணிக்கு ஃபிட்ஸ் எயார் (FitsAir) நிறுவனத்தின் 8D-821 விமானமும், பிற்பகல் 02:30 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL-231 விமானமும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளன.

மேலும், புதன்கிழமை (04) இரவு 06:15 மணிக்கு ஃபிளை துபாய் (flydubai) நிறுவனத்தின் FZ-570 விமானமும், இரவு 09:50 மணிக்கு எமிரேட்ஸ் (Emirates) நிறுவனத்தின் EK-655 விமானமும் கட்டுநாயக்கவிலிருந்து துபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளன.

அதேபோல், புதன்கிழமை (04) அதிகாலை 12:00 மணிக்கு ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து ஸ்மார்ட் விங்ஸ் (Smartwings) நிறுவனத்தின் 3Z-7648 விமானம் சரக்குகளுடன் வருகை தந்தது. அதிகாலை 12:05 மணிக்கு ஃபிட்ஸ் எயார் (FitsAir) நிறுவனத்தின் 8D-822 விமானம் 133 பயணிகளுடனும் 06 ஊழியர்களுடனும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இவை தவிர, புதன்கிழமை(04) பிற்பகல் 04:50 மணிக்கு ஃபிளை துபாய் (flydubai) நிறுவனத்தின் FZ-569 விமானமும், இரவு 06:45 மணிக்கு எமிரேட்ஸ் (Emirates) நிறுவனத்தின் EK-654 விமானமும் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளன

ad

ad