புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

முட்டையிடும் பெட்டைக்கோழி

ஒரு முறை பாண்டிச்சேரி கவியரங்கத்தில் கம்பன் சைவமா? வைணவமா? என்ற தலைப்பில் கவிபாட, அரங்கம் முடிந்தவுடன் ஒரு முதுபெரும் தமிழ்ப்புதல்வர் வாலியிடம் “இவ்ளோ நல்லா கவிபாடும் நீங்க, சினிமா பாடல்களில் மட்டும் ஏன் வர்த்தக நோக்கோடு செயல்படறீங்க”ன்னு கேட்டார். அதற்கு வாலி சொன்ன பதில்:
இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குக்
தாலாட்டும் தாய்;
அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!
மேலும்…
எந்தப்பா சினிமாவில்
எடுபடுமோ? விலைபெறுமோ?
அந்தப்பா எழுதுகிறேன்;
என்தப்பா? நீர் சொல்லும்!
மோனை முகம் பார்த்து
முழங்கிட நான் முயற்சித்தால்
பானை முகம் பார்த்தென்
பத்தினியாள் பசித்திருப்பாள்
கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடிக்கும்
சிட்டுக்கள் நீங்கள்;
சிறியேன் அப்படியா?
மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக்கோழி!
என்று தன் மனதில் பட்டதை கவிதை நயத்தோடு படிக்கும் எல்லோருக்கும் எளிதாக புரியும் வகையில் உண்மையை பல கவியரங்குகளில் புலவர்களுக்கு சொல்லியதாக அவரின் “நானும் இந்த நூற்றாண்டும்” நூலில் குறிப்பிடுகிறார்

உலகம் சுற்றா “வாலி”பன்

DElhi
பத்தாயிரம் திரைப்பட பாடல்களும், ராமாயண பாரத காவியங்களை புதுக்கவிதையிலும் இன்ன பிற கவிதை நூல்களும் எழுதியிருக்கும் கவிஞர் வாலி அவர்கள், எனக்கு கிடைத்த உலகம் போதும், வெளிநாடுகளென்ன, இங்கிருக்கிற டில்லியே நான் பார்த்ததில்லை என்று ஒரு பேட்டியில் சொன்னார்.
தகவல் : ஸ்ரீகாந்த்.
தொடர்புடைய சுட்டி “
தமிழ் சினிமாவும் பாடல்களும்

கண்ணதாசனே !

Kannadasan 2
கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !
நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !
சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !
உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !
திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கைநழுவி 
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !
 
அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !
பதினெட்டுச்
சித்தர்களுக்கும் 
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும் 
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !
 
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !
- கவிஞர் வாலி
(கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை}

ஒபாமா உனக்கு ஒப்பாகுமா?

Kalingar
தமிழ் வணக்கம்,
தமிழினத் தலைவர் வணக்கம்.
எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்?
வைப்பேன் என் தலைவனுக்கு
மட்டும் ஒரு வணக்கம்.
எவரேனும் எண்ணுவரோ
தலைவன் வேறாக
தமிழ் வேறாக ?
தலைவரல்லவா இருக்கிறார்
தமிழுக்கு வேராக.
கலைஞர் பெருமானே !
உன் வருகை
கண்டதும் தூக்குவேன்
என் இருகை.
உயரிய தலைவா
உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு
வாயை திறந்தால் தான்
என் வாய்க்கும்
கவிதை வாய்க்கும்.
என் பாட்டுக்கு
நீதான் பிள்ளையார் சுழி !
உன்னை முன் வைக்காமல்
என்ன எழுதினாலும்
என் பாட்டு வாங்கும் பெரிய சுழி !
அருமை தலைவா !
ஆண்டு 2007-ல்
எமனிடம் இருந்து நீ
என்னை மீட்டாய் !
அதற்கு முன்
ஆண்டு 2006-ல் – ஓர்
‘உமனிடம்’ இருந்து
தமிழ் மண்ணை மீட்டாய் !
 
தேர்தலுக்கு தேர்தல்
5 விரல்களை அகலக்காட்டி,
அஞ்சு அஞ்சு என்று
அயலாரை ஓட்டி,
5 முறை அரியணை ஏறிய
அஞ்சுக செல்வா !
தேர்தல் வரலாற்றில் – உன்னை
வெகுவாக விமர்சனம் செய்ய
டில்லியில் ஒரு கோபால்சாமி
திருமங்கலத்தில் ஒரு கோபால்சாமி.
நீயோ
இந்த 2 கோபால்சாமிகளையும்
புறம் தள்ளிய
கோபாலபுரத்து சாமி !
எனவேதான்
கும்மாளமிட்டு – உன்னை
கொண்டாடுகிறது
இந்த பூமி !
அய்யா !
50 ஆண்டு காலம் – உன்
சேவடிபட்ட சபை
சென்னை சட்டசபை !
 
நாவில் தமிழ் ஏந்தி – நீ
நற்றமிழ் இட்ட சபை !
முதல் முதல்
தேர்தல் குளத்தில்
குளிக்க நீ தொடங்கிய ஊர்தான்
குளித்தலை !
குளித்தலைக்கு பிறகு
இதுவரை .. ..
குனியா தலை
உன் தலை !
இனியும் குனியாது
வெற்றியை குவிக்கும்
என்பதும் உன் தலை.
சாதாரணமாய் இருந்து
சரித்திரம் படைத்தாய்.
அய்யா !
அந்த வகையில் நீ ஒரு ஒபாமா !
சரித்திரம் படைத்த பின்பும்
சாதாரணமாக இருக்கிறாய்
அந்த வகையில் உனக்கு
ஒபாமா ஒப்பாகுமா?
உன்னை விட்டு
வலது போனால் என்ன ?
இடது போனால் என்ன ?
மேலே விழுந்த நரி
பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சிரி.
உன்னிடம் உள்ளது
நடு நிலைமை
நடுநிலைமை தான்
நல்ல தலைமை !
கலைஞர்கோனே !
கருப்பு கண்ணாடி அணிந்த
கவி வெண்பாவே !
நீயே உனக்கு நிகர்.
நீ நகர்ந்தால்
உன் பின்னே
நகர்கிறது நகர் !
நிஜம் சொன்னால்
ரஜினியை விட
நீயொரு வசீகரமான ‘பிகர்’ !
 
நாவினிக்க நாவினிக்க
உன்னை பாடியே
என் உடம்பில்
ஏறிப்போனது சுகர் !
நீ எங்கள் கிழக்கு !
உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு !
நம்மொழி செம்மொழி
அதனை அங்கீகரிக்காது
நாள் கடத்தியது நடுவண் அரசு.
நீ குட்டினாய்
உடனே குனிந்தது
அதன் சிரசு !
 
அதுபோல்
தமிழனின் அடையாளங்களை
வட்டியும் முதலும் சேர்த்து
வள்ளலே நீதான் மீட்டாய் !
தரை மீனை திரும்ப
தண்ணீரில் போட்டாய் !
அதனால் தான் அய்யா – உன்னை
அவருக்கு நிகர் அவர் – தமிழனை
துன்பம் தீண்டாது மீட்கும்
தடுப்புச் சுவர் !
மையம் ஏற்கும் வண்ணம்
உன்னிடம் உள்ளது பவர் !
அத்தகு பவர் – உன்போல்
படைத்தவர் எவர் ?
அமைச்சர் பெருந்தகை
ஆற்காட்டாரிடம் உள்ள பவரால்
வீட்டு விளக்கு எரியும்
நடுரோட்டு விளக்கு எரியும்.
உயரிய தலைவா
உன்னிடம் உள்ள பவரால் தான்
நாட்டு விளக்கு எரியும் – நற்றமிழ்
பாட்டு விளக்கு எரியும்.
குப்பன், சுப்பன் வாழும் குப்பங்கள்
ஓயாமல் உன்னால் தான் ஒளிர்கிறது !
அடுப்பு விளக்கு
அன்பு விளக்கு
அமைதி விளக்கு
அறிவு விளக்கு என
பல்விளக்கை இன்று
உன்னை பணித்து வாழ்த்தி
சொல்வேன் போய் நீ பல் விலக்கு என்று.
தமிழா என் நண்பா
உனக்கு தருவேன்
கேள் ஒரு வெண்பா !
- கவிஞர் வாலி
(வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழர் பெருவிழா நிகழ்ச்சியில்)

சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கும். அதை தீர்மானிப்பவன் இறைவன்தான். ‘உனக்கு பாட்டு எழுத வராது; ஊரில் நிலம் இருந்தா போயி விவசாயம் பண்ணு’ என்று என்னை விரட்டியவர் எம்.எஸ்.விசுவநாதன். பிறகு அவர் இசையில் 3 ஆயிரம் பாடல்களை எழுதினேன்.
‘சந்திரலேகா’ படத்தில் ராஜாவின் செருப்பை எடுத்து வைக்கும் வேலையாள் வேடம் கூட மறுக்கப்பட்ட சிவாஜி கணேசன் பிற்காலத்தில் நடிகர் திலகமாக வளர்ந்தார். இப்படி சினிமாவில் ஜெயிக்க காலம் நேரம் கூடி வரவேண்டும்.
சில இயக்குனர்கள் நான் நினைத்தது வரவில்லை என்பார்கள். ஒரு இயக்குனர் ‘கன்னம்’ என்ற சொல்லுக்கு எளிமையான வார்த்தையாகப் போடுங்கள் என்றார். ‘கன்னம்’ என்பதே எளிமையானது தான் என்று சொல்லிப்பார்த்தேன். அவர் கேட்கவில்லை. கவிஞர் அப்துல்ரகுமானிடம் இதை கூறினேன். ‘கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியதுதானே’ என்றார்.
- விழாவொன்றில் கவிஞர் வாலி
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி  இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன்.பாட்டெழுத வந்துவிட்டால்  மாயக்கண்ணன். ஸ்ரீரங்கம் தந்த தமிழ்ச் சுரங்கம் வாலியின்சீக்ரெட் சாக்லேட்ஸ்.....
திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறைவாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்குவந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகுசென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!.
வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளைசில்க்காக இருந்தால் சந்தன நிறம்இவை தவிர வேறு விருப்பம் இல்லை!
`பொய்க்கால் குதிரை, `சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’, என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி!.
`எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’ –கண்ணதாசன்இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!
அம்மாபொய்க்கால் குதிரைகள்நிஜ கோவிந்தம்பாண்டவர் பூமிகிருஷ்ண விஜயம்அவதார புருஷன் என 15 புத்தங்கள் எழுதி இருக்கிறார். சிறுகதை,கவிதைஉரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்!
எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு சென்றதில்லை கவிஞர் வாலிபாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!
வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தத் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள்நடிகைகள் பத்மினிஈ.வி.சரோஜா இருவரும் ரமணத்திலகம்பத்மினிஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள். சமீபத்திய வாலியின் பெரும் துயர் மனைவியின் மறைவு!
வாலி வீட்டில் தயாராகும் தோசைமிளகாய்பொடி ரொம்ப்ப் பிரபலம். `இன்று தோசைமிளகாய்ப் பொடிக்கு வழியிருக்கா’ என்று அடிக்கடி எம்.ஜி.ஆர்.வந்துவிடுவாராம்!
வாலி இது வரை திரையிசைப் பாடல்களாக 15, 000-க்கு மேல் எழுதி இருக்கிறார். தனிப்பாடல்கள் கணக்கில் அடங்காது. இன்றும்  எழுதிக் கொண்டே இருப்பதால்கணக்கு இன்னும் மேலே போதும்!
1966 –ல் வாங்கிய எம்.எஸ்.கியூ 1248 பியட்  இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல்புதிதாக மாற்றிக் கொள்ளத்துணியாமல் வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார் வாலி!
சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்ஸீக்கு எழுதி அனுப்பியது தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலைஎன்றாலும் கந்தனே உனை மறவேன்’ பாடல் இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!
ஆரம்பத்தில் தங்கச் சங்கிலிமோதிரம்ரோலக்ஸ் வாட்ச் சகிதம் இருப்பார். இப்போது எல்லாம் தவிர்த்துவிட்டுஎளிமையை அணிந்திருக்கிறார்!
17 திரைப்படஙகளுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் வாலிஅவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டிக் கண்ணன்ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி ஒரே ஒரு கிராமத்தில் இப்படி எழுதிக் கொண்டே போகலாம். மாருதிராவோடு சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!
1966 –ல் `மணிமகுடம்’ படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும் தொடர்கிறது. `அவதார புருஷ்ன்விகடனில் வெளிவந்த காலங்களில் அதிகாலைகளின் முதல் தொலைபேசிஅழைப்பு கலைஞருடையது!
எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர். எம்.ஜி.ஆர்.எப்பவும்`என்ன ஆண்டவனே’ என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி `என்ன வாத்தியாரே’!
பத்மஸ்ரீபாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருதுகலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழிஉலகத்தமிழ்மாநாடு போன்றவற்றின் இவரது பங்கும் உண்டு!
ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன்,சுகிதிருலோக சீதாராம்,ஏ.எல்.ராகவன்,ஸ்ரீரங்கம் நரசிம்மன்ராமகிருஷ்ணன்ம்பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!
வாலி தனிமை விரும்பி அல்லஎவ்வளவு கூட்டத்தில் நண்பர்களோடு இருந்தாலும் ஒரு தாளை உருவிக் கொடுத்தால் கவிதை வந்து விடும்!
வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
வாலியின் இஷ்ட தெய்வம் முருகன்எப்பவும் அவரின் உதடுகள் `முருகாஎன்று தான் உச்சரிக்கும். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம் தரத் துடிப்பார்!
வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின்வரலாறு அவர்களின் திறன்,ஸ்டைல் எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுவார்போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால் முடியும்!
எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து,ஆசி பெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான்இன்னும் பழநி பாரதிநா.முத்துக்குமார்,பா.விஜய் நெல்லை ஜெயந்தாஎன எல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்!
2005 –ல் ராஹ் டி.வி.வாலி 12,000 பாடல்கள் எழுதியதற்காக `என்றென்றும் வாலிஎன விழா எடுத்து 100 சவரன் தங்கம் பரிசு அளித்தார்கள்வராத நட்சத்திரங்களைடைரக்டர்களை எண்ணி விடலாம். திரையுலகின் பெரிய நிகழ்வு அது!
வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!
ஸ்ரீரங்கத்தில் `பேராசை பிடித்த பெரியார் என்னும் சமூக நாடகத்துக்கு`இவர்தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் வாலிக்கு உண்டு!
சென்னை : பிரபல திரைப்பட பாடலாசிரியர் வாலி, சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 14,ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்தார் வாலி. அவருக்கு நுரையீரல் தொற்று பிரச்னை இருந்ததை கண்டறிந்த டாக்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். 

பிறகு அவர் உடல்நிலை மீண்டும் மோசமானதை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. தகவல் வெளியானதும் ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் மருத்துவமனை வளாகத்தில் சோகத்துடன் குவிந்தனர். பின்னர் அவரது உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம், இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது. மறைந்த வாலிக்கு, பாலாஜி என்ற மகன் உள்ளார். வாலியின் மனைவி ரமணத்திலகம் ஏற்கனவே இறந்துவிட்டார். 

காவியக் கவிஞர் வாலி திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த டி.எஸ்.ரங்கராஜன், வாலியானது சினிமாவுக்காக. கவிஞர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட அவர், ஓவியரும் கூட. தமிழ்த் திரையுலகில் கண்ணதாசன் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தானும் நுழைந்து சிறப்பான பாடல்கள் எழுதி தன்னை நிலைநிறுத்தியவர் வாலி. எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ரஜினி,கமல், விஜய்,அஜீத், தனுஷ், சிம்பு என பல தலைமுறை நடிகர்களுக்கு பாட்டு எழுதிய பெருமை கொண்டவர் வாலி. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் எழுதியுள்ளார். 1958ல் ‘அழகர்மலை கள்ளன்’ என்ற படத்தில் பாடல் எழுத தொடங்கிய வாலி, கடைசியாக வசந்தபாலன் இயக்கும் ‘காவியத் தலைவன்‘ என்ற படத்துக்காக எழுதியுள்ளார்.

வாலியை சினிமாவுக்கு பாட்டு எழுத அழைத்து வந்தவர், சமீபத்தில் மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். அவருக்கு தபால் கார்டில் வாலி எழுதி அனுப்பிய ‘கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன்’ என்ற பாடலுக்கு டி.எம்.சவுந்தரராஜன் இசையமைத்து பாடியது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்

2007,ல் மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது. 1970ல் ‘எங்கள் தங்கம்’, 79ல் ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’, 89ல் ‘வருஷம் 16’ மற்றும் ‘அபூர்வ சகோதரர்கள்’, 90ல் ‘கேளடி கண்மணி’, 2008ல் ‘தசாவதாரம்’ படங்களில் பாடல்கள் எழுதியதற்காக, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றார். தவிர, தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். ஆனால், 73ல் ‘பாரத விலாஸ்’ படத்தில் அவர் எழுதிய ‘இந்திய நாடு என்வீடு’ என்ற பாடலுக்கு மத்திய அரசு வழங்கிய தேசிய விருதை வாங்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

நூல்கள்

வாலி ஏராளமான நூல்கள் எழுதியுள்ளார். ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற சுயசரிதையை எழுதினார். ‘அவதார புருஷன்’, ‘பாண்டவர் பூமி’, ‘ராமாநுஜ காவியம்’, ‘கிருஷ்ண விஜயம்’, ‘கலைஞர் காவியம்’, ‘கிருஷ்ண பக்தன்’, ‘வாலிப வாலி’, ‘அம்மா’, ‘பொய்க்கால் குதிரைகள்’, ‘நிஜ கோவிந்தம்’ போன்ற நூல்கள் வரவேற்பு பெற்றவை. சிறுகதை, கவிதை, உரைநடை கவிதை என வாலி ஆயிரக்கணக்கான படைப்புகளை வழங்கியுள்ளார். ‘கலியுக கண்ணன்’, ‘காரோட்டி கண்ணன்’, ‘ஒரு செடியின் இரு மலர்கள்‘, ‘சிட்டுக்குருவி’, ‘ஒரே ஒரு கிராமத்தில்’ உட்பட 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 

66,ல் ‘மணி மகுடம்’ படப்பிடிப்பில் கலைஞர் கருணாநிதியை சந்தித்துப் பேசியது முதல், தனது இறுதிக்காலம் வரை அவரது நெருங்கிய நண்பராக இருந்தார் வாலி. அவரை ‘என்ன ஆண்டவனே’ என்று எம்.ஜி.ஆரும், ‘என்ன வாத்தியாரே’ என்று சிவாஜியும் அன்புடன் அழைப்பார்கள். வாலி வீட்டின் தோசையும், மிளகாய்ப் பொடியும் சினிமா வட்டாரத்தில் பிரபலம். எம்.ஜி.ஆர் உட்பட பல பாடலாசிரியர்கள் அதற்கு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். பல முன்னணி ஹீரோக்களுக்கு ‘ஓப்பனிங் சாங்’ எழுத வைப்பது பல இயக்குனர்களின் சென்டிமென்ட். இன்றைக்கும் இளமையான பாடல் வரிகளை எழுதியதால் அவர் எப்போதும் ‘வாலிபக் கவிஞர்’ என்றே அழைக்கப்பட்டார். 

பாஸ்போர்ட் இல்லா கவிஞர்

பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசியிருந்தாலும், இதுவரை வாலி வெளிநாடு சென்றதில்லை. அவரை, ‘பாஸ்போர்ட் இல்லாத கவிஞர்’ என்று சொல்வார்கள். ‘இந்த சினிமா வாழ்க்கை, எம்.எஸ்.வி போட்ட பிச்சை’ என்று அடிக்கடி நன்றி மறவாமல் குறிப்பிடுவார் வாலி. ‘மன்னன்‘ படத்துக்காக வாலி எழுதிய, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடலின் வரிகள், தாய்மையின் மேன்மையை உணர்த்துகிறது என்று பாராட்டி, திருச்சியிலுள்ள ஒரு கோவிலில் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சக்கப் போடு போடு ராஜா

சிவாஜிக்காக வாலி எழுதிய, ‘இதோ எந்தன் தெய்வம்‘, ‘கல்யாண பொண்ணு கடைபக்கம் போனா‘, ‘மகராஜா ஒரு மகராணி‘, ‘அப்பப்பா நான் அப்பனில்லடா‘, ‘சக்கப் போடு போடுராஜா‘, ‘மாதவி பொன்மயிலாள்’ உட்பட பல பாடல்கள் எப்போதும் இனிப்பவை. சமீபத்தில் வெளியான ‘ஒஸ்தி‘ படத்தில் அவர் எழுதிய, ‘கலாசலா கலசலா கல்லாசா கலசலா‘ பாடலும், ‘தடையறத் தாக்க‘ படத்தில் இடம்பெற்ற ‘பூந்தமல்லிதான் நான் புஷ்பவல்லிதான்‘ என்ற பாடலும் ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நான் ஆணையிட்டால்...

எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய பாடல்கள் புகழ்பெற்றவை. ‘நான் ஆணையிட்டால்...’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்’, ‘ராஜாவின் பார்வை ராணி யின்பக்கம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி’, ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’, ‘தரை மேல் பிறக்க வைத்தான்’, ‘காற்று வாங்க போனேன்’, ‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை’, ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ உட்பட அனைத்து பாடல்களுமே முத்துகள்.

15 ஆயிரம் பாடல்கள் 

காதல், நகைச்சுவை, வாழ்க்கை தத்துவம், கலகலப்பு, காதல் தோல்வி, பக்தி என பல்வேறு நிலைகளில் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்தவர் வாலி. கிட்டதட்ட அரைநூற்றாண்டு காலமாக பாடல் எழுதிய வாலி, சினிமா வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில், தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகளால் ஊருக்குத் திரும்ப முயன்றபோது, ‘மயக்கமா, கலக்கமா‘ என்ற பாடலைக் கேட்டு, நம்பிக்கையோடு வீடு திரும்பினார். இயக்குனர் கே.பாலசந்தரும், கமலும் கேட்டுக்கொண்டதற்காக ‘பொய்க்கால் குதிரை‘, ‘சத்யா‘, ‘பார்த்தாலே பரவசம்‘, ‘ஹே ராம்‘ ஆகிய படங்களில் நடித்த வாலி, மாருதி ராவுடன் இணைந்து ‘வடை மாலை‘ என்ற படத்தை இயக்கினார்.
இதோ எந்தன் தெய்வம்‘, ‘கல்யாண பொண்ணு கடைபக்கம் போனா‘, ‘மகராஜா ஒரு மகராணி‘, ‘அப்பப்பா நான் அப்பனில்லடா‘, ‘சக்கப் போடு போடுராஜா‘, ‘மாதவி பொன்மயிலாள்’ 
‘கலாசலா கலசலா கல்லாசா கலசலா‘ ‘தடையறத் தாக்க‘ படத்தில் இடம்பெற்ற ‘பூந்தமல்லிதான் நான் புஷ்பவல்லிதான்‘ 
நான் ஆணையிட்டால்...’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்’, ‘ராஜாவின் பார்வை ராணி யின்பக்கம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி’, ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’, ‘தரை மேல் பிறக்க வைத்தான்’, ‘காற்று வாங்க போனேன்’, ‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை’, ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ 
வாழ்க்கை என்றால் ஆயிரம் இரூக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஒடுவதி ல்லை ----உனக்கு கீழே இருப்பவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு -வாலி 
வாலியின் வார்த்தை ஜாலங்களுக்கு ஓர் முத்திரை எனக்கு எல்லா வகையிலும் பிடித்த ஓர் பாடல்
சூரியகாந்தி படத்தில் முத்துராமன் ஜெயலலிதா நடித்த எம் எஸ் வி இசையில் வாலி எழுதி என் உயர் பாடகர் எஸ் பீ பாலாவோடு ஜெயலிலத இணைந்து பாடிய அபூர்வமான பாடல் இது .பாடல் வரிகள் இசை பாடகர்கள் இனிமை அற்புதமான நடிப்பு கதை இயக்கம் என அனைத்தும் ஒன்றிணைந்த பாடல்
வாலியின் வார்த்தை ஜாலங்களுக்கு ஓர் உத்முத்திரை எனக்கு எல்லா வகையிலும் பிடித்த ஓர் பாடல் சூரியகாந்தி படத்தில் முத்துராமன் ஜெயலலிதா நடித்த எம் எஸ் வி இசையில் வாலி எழுதி என் உயர் பாடகர் எஸ் பீ பாலாவோடு ஜெயலிலத இணைந்து பாடிய அபூர்வமான பாடல் இது .பாடல் வரிகள் இசை பாடகர்கள் இனிமை அற்புதமான நடிப்பு கதை இயக்கம் என அனைத்தும் ஒன்றிணைந்த பாடல்

பெண்கள் யூரோ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்குப் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. 
பெரு மதிப்புப் பெற்ற விக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர்; ஆதரிக்குமாறு தமிழ்க் கூட்டமைப்பு வேண்டுகோள் 
வட மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசரும் சமூகத்தின் பெருமதிப்பைப் பெற்றவருமான
நான் இந்தியாவின் தெரிவு அல்ல; விக்னேஸ்வரன் கூறுகிறார்

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கியமைக்கு இந்தியாவே பின்னணியில் இருப்பதாக வெளியான செய்திகளை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
“பத்திரிகைகளில் வெளியான செய்திகளை நானும் பார்த்திருக்கிறேன். அவற்றில் எந்த உண்மையும் இல்லை. இந்தியாவிலிருந்து எவரும் இது தொடர்பாக கதைத்திருக்கவில்லை.நானும் அங்குள்ளவர்களிடம் இது பற்றிப் பேசியிருக்கவில்லை’ என்று நேத் எப்.எம்.வானொலிக்கு நீதியரசர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நியமித்திருக்கிறது.

நீதியரசர்  விக்னேஸ்வரனின் தெரிவு இன்னொரு யுத்தத்திற்கான ஆரம்பம்; அமைச்சர் சம்பிக்க
தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் வட மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது

ஏற்காடு எம்.எல்.ஏ. சி. மரணம்: முதல்வர் நேரில் அஞ்சலt

ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.பெருமாள் மரணம்: முதல்வர் நேரில் அஞ்சலி.
 1/1 
சேலம் ஜூலை.19 - சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சி.பெருமாள் நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அதிமுகவின் தீவிர விசுவாசியான அவருக்கு தமிழக முதல்வர்  ஜெயலலிதா அவரது சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டி கிராமத்திற்கு நேற்று மாலை நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கச்சத் தீவு விவகாரத்தில் கருணாநிதியின் துரோகங்கள்: பட்டியலிட்டமுதல்வர் கடும் விமர்சனம்

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி தன் ஆட்சிக் காலத்தில் நடந்த கச்சத்தீவு தாரை வார்ப்பைத் தடுக்காமல் தவறவிட்டு, இப்போது நீதிமன்றத்தை நாடியிருப்பதாகச் சொல்வது மக்களை ஏமாற்றும் செயல் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர்

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: சேரன்மகாதேவியில் தேமுதிகவினர் 143 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் போலீஸ் தடையை மீறி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் 143 பே
“விமானத்தின் இறக்கைகளும் அழுதன..” பிரபாகரனின் தாயாருக்காக கசிந்துருகிய வாலி! -வைகோ இரங்கல்!
கவிஞர் வாலி மறைவையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கவிஞர் வாலியின் இல்லம் - இளமைக்காலங்களை நினைவூட்டம் படங்கள்

மறைந்த கவிஞர் வாலியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!
பிரபல கவிஞர் வாலி சென்னையில் உடல்நலக் குறைவால் 18.07.2013 வியாழன் மாலை காலமானார். 
மறைந்த வாலியின் உடல் சென்னை, எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வாலியின் மறைவை கேட்டு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். 
திரைப்பட இயக்குநர் பாலச்சந்தர், கேமரா மேன் ஸ்ரீராம், இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கைஅமரன், சங்கர் கணேஷ், இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா உட்பட திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அவரது இறுதிசடங்கு 19.07.2013 வெள்ளிக்கிழமை சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் வாலியின் உடல் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு
 

பிரபல கவிஞர் வாலி சென்னையில் உடல்நலக் குறைவால் 18.07.2013 வியாழன் மாலை காலமானார். 
காவியக் கவிஞர் வாலி (1931 - 2013) முற்றுப்புள்ளி அல்ல காற்புள்ளி! 
 

‘ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்’
-இது 1950-களில் கவிஞர் வாலி எழுதி, டி.எம்.எஸ். அவர்கள் மனமுருகப் பாடிய முருகப்பெருமானைப் பற்றிய பாடல்.

கவிஞர் வாலி உடலுக்கு சங்கர்,
வெங்கட் பிரவு, பவதாரணி அஞ்சலி 

18 ஜூலை, 2013

பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? வாலி 
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?

கவிஞர் வாலி காலமானதாக செய்தி ஒன்று கூறுகிறது 

கடற் புலிகளின் நீர்மூழ்கி சாதனங்களை கண்டு அச்சத்தில் உறைந்த கடற்படை

LTTE_scooter22கடற் புலிகளின் நீர்மூழ்கி சாதனங்கள்! கடற்புலிகளால் நீருக்கு அடியில் நீச்சல் போட பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், நீர் மூழ்கி உடைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் இவை. 

ad

ad