"அவரது உடலை எரித்த தீ... அணையாது; அணையக்கூடாது. அது ஒரு புதிய தொடக்கத்திற்குக் காரணமாக இருக்கவேண்டும்' என்றார் ஜந்தர்மந்தர் பகுதியில் கையில் மெழுகுவர்த்தி ஏற்றியிருந்த சாஜிதா. அவரது குரலும் மனமும் அந்த 23 வயது மருத்துவ மாணவியின் நினைவாகவே இருப்பதைக் காண முடிந்தது. சாஜிதாவைப் போலவே அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் உணர்வுகளும் ஒருங்கிணைந்திருந்தன.
-
3 ஜன., 2013
"அவரது உடலை எரித்த தீ... அணையாது; அணையக்கூடாது. அது ஒரு புதிய தொடக்கத்திற்குக் காரணமாக இருக்கவேண்டும்' என்றார் ஜந்தர்மந்தர் பகுதியில் கையில் மெழுகுவர்த்தி ஏற்றியிருந்த சாஜிதா. அவரது குரலும் மனமும் அந்த 23 வயது மருத்துவ மாணவியின் நினைவாகவே இருப்பதைக் காண முடிந்தது. சாஜிதாவைப் போலவே அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் உணர்வுகளும் ஒருங்கிணைந்திருந்தன.
தனது பெயரில் எந்த ஒரு அமைப்பும் செயல்பட அனு மதித்ததில்லை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால், கவிஞர் இலக்கியா நடராஜ னிடம் தனக்கிருக்கும் நட்பின் அடையாள மாக, அவர் உருவாக்கிய "ப.சிதம்பரம் கலை இலக்கியப் பேரவை' என்று அமைப்பிற்கு மட்டும் அனுமதி தந்ததுடன் அங்கீ கரிக்கவும் செய்தார். இந்த அமைப்பின் மூலம், இலக்கியா நடராஜன் தொகுத்து தயாரித்த "ப.சிதம்பரம் : ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த சனியன்று(29-ந் தேதி) சென்னை காமராஜர் அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது
மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், பரபரப்புக்குக் குறைவில்லாமலே நடந்து முடிந்திருக்கிறது.
டிசம்பர் 31-ந் தேதி சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு வெங்கடேஷ்வரா பேலஸ் மண்டபத்தில் அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் ஜெ.
2 ஜன., 2013
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு
சுவிட்சர்லாந்து நீதிமன்றில் இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நல்லூர் கோவில் அருகே திடீர் இராணுவக் காவலரண்! மக்கள் கடும் அதிர்ச்சி!!
வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் இராணுவக் காவலரண் ஒன்று அவசரமாக அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த இராணுவக் காவலரண் நேற்று அவசரமாக அமைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுகொலை குறித்த தொகுப்பு அனைத்து மொழிகளிலும் - வைகோ அறிவிப்பு!
ஈழப்போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பான நிகழ்வு தொகுப்பை அனைத்து மொழியிலும் வெளியிட்டு வருகிறோம். வருகிற 5ஆம் திகதி மராத்தி மொழியில் வெளியிடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
யாழ்.குப்பிளான் பகுதியில் இந்து- கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையே முரண்பாடு
யாழ். குப்பிளான் பகுதியில் இந்து - கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையில் தேவாலயம் ஒன்று அமைவது தொடர்பாக கடுமையான முரண்பாடு நிலவிவரும் நிலையில், இந்து மதம் சார்ந்த மக்கள் இன்று காலை அப்பகுதியில் போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றனர்.
3 குழந்தைகள் உயிரிழப்பு! பெற்றோர்களும் தற்கொலையா என போலீசார் விசாரணை! விழுப்புரம் அருகே சோகம்!
விழுப்புரம் அருகே பனப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சத்யா, சங்கீதா, தியாகராஜன் ஆகிய 3 குழந்தைகளின் சடலம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த 2012 ஆண்டிற்கான சிறந்த மனிதராக "times of india "நாளிதழும் விஜய் தொலைக்காட்சியும் அன்பிரிகினிய நமது அய்யா சுப.உதயகுமார் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளது .இந்த ஊடகங்களுக்கு நமது நன்றிகளை தெரிவித்துகொள்வோம்.
"""அன்பிற்கினிய தமிழ் சொந்தங்களே தயவு செய்து நம்மை காக்க ஒரு ரட்சகர் வருவார் என்று எதிர்பார்த்து காத்திராமல்...நம் வழிகாட்டிகளை வரலாற்று புத்தகங்களில் தேடாமல் ......நம் கதாநாயகர்களை வெள்ளித்திரையில் தரிசிக்காமல் ....நம் அருகே நின்று நமக்காக வாழும் இம்மாமனிதரை அரவணைத்துக்கொள்ளுங்கள்...அன்பு செலுத்துங்கள்...கொஞ்சம் முயன்று பின்பற்றுங்கள்...
"""அன்பிற்கினிய தமிழ் சொந்தங்களே தயவு செய்து நம்மை காக்க ஒரு ரட்சகர் வருவார் என்று எதிர்பார்த்து காத்திராமல்...நம் வழிகாட்டிகளை வரலாற்று புத்தகங்களில் தேடாமல் ......நம் கதாநாயகர்களை வெள்ளித்திரையில் தரிசிக்காமல் ....நம் அருகே நின்று நமக்காக வாழும் இம்மாமனிதரை அரவணைத்துக்கொள்ளுங்கள்...அன்பு
தடுப்பில் உள்ள மாணவர்களை கைவிட்டது யாழ்.பல்கலை! கலைப்பீடத்தை இம் மாதம் ஆரம்பிக்க தீர்மானம்!
யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலைப்பீடத்தை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை கலைப் பீடத்தை
பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை - புதிய ஆலோசனை முன்மொழிந்தார் தமிழக முதல்வர்!
பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோரை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.
மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு
முன்னாள் போராளியை விபச்சாரியாக்கிய விகடனுக்கு திறந்த மடல்!
ஈபிடிபியின் தினமுரசாகிறதா ஆனந்த விகடன்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)