-
3 ஜன., 2013
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் பிரச்சனையை திசை திருப்பும் வகையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பதற்கு புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக துணையுடன் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசானது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் தொடர்ந்து நடத்தி வருகிறது
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக துணையுடன் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசானது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் தொடர்ந்து நடத்தி வருகிறது
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டமல்ல என்பதுடன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எந்தவிதமான சட்ட அதிகாரங்களும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
நிலையியற் கட்டளை 78(ஏ) ஒரு சட்டமல்ல ஆதலால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஒரு நீதிபதியை குற்றவாளி என தீர்மானிக்கும் சட்ட அதிகாரமோ அல்லது வலுவோ இல்லை என்ற உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வடக்கில் யுத்தம் முடிவடைந்து விட்டது என்று அரசு பகிரங்கமாகவே சர்வதேசத்திற்கு அறிவித்துவிட்டது. இந்நிலையில் முன்னாள் விடுதலைப் புலிகள் இன்னமும் இருக்கின்றார்கள் என்று இராணுவம் கூறுவதில் நியாயம் இல்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் இராணுவத்தினருக்கு என்ன வேலை? எமது தமிழ்ப் பிள்ளைகளை சுதந்திரமாக வாழவிடுங்கள்.”
பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசு செய்துள்ள சில அறிவிப்புகள் ஏற்கத்தக்கவையாக இருந்தாலும் பல ஏற்கத்தக்கவையாக இல்லை திருமாவளவன்
சென்னை: பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசு செய்துள்ள சில அறிவிப்புகள் ஏற்கத்தக்கவையாக இருந்தாலும் பல ஏற்கத்தக்கவையாக இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமைப் பதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகியவற்றுக்கு “வீடோ’ அதிகாரம் உள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற 10 நாடுகள் தாற்காலிக உறுப்பினர்கள்.
"அவரது உடலை எரித்த தீ... அணையாது; அணையக்கூடாது. அது ஒரு புதிய தொடக்கத்திற்குக் காரணமாக இருக்கவேண்டும்' என்றார் ஜந்தர்மந்தர் பகுதியில் கையில் மெழுகுவர்த்தி ஏற்றியிருந்த சாஜிதா. அவரது குரலும் மனமும் அந்த 23 வயது மருத்துவ மாணவியின் நினைவாகவே இருப்பதைக் காண முடிந்தது. சாஜிதாவைப் போலவே அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் உணர்வுகளும் ஒருங்கிணைந்திருந்தன.
தனது பெயரில் எந்த ஒரு அமைப்பும் செயல்பட அனு மதித்ததில்லை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால், கவிஞர் இலக்கியா நடராஜ னிடம் தனக்கிருக்கும் நட்பின் அடையாள மாக, அவர் உருவாக்கிய "ப.சிதம்பரம் கலை இலக்கியப் பேரவை' என்று அமைப்பிற்கு மட்டும் அனுமதி தந்ததுடன் அங்கீ கரிக்கவும் செய்தார். இந்த அமைப்பின் மூலம், இலக்கியா நடராஜன் தொகுத்து தயாரித்த "ப.சிதம்பரம் : ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த சனியன்று(29-ந் தேதி) சென்னை காமராஜர் அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது
மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், பரபரப்புக்குக் குறைவில்லாமலே நடந்து முடிந்திருக்கிறது.
டிசம்பர் 31-ந் தேதி சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு வெங்கடேஷ்வரா பேலஸ் மண்டபத்தில் அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் ஜெ.
2 ஜன., 2013
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு
சுவிட்சர்லாந்து நீதிமன்றில் இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நல்லூர் கோவில் அருகே திடீர் இராணுவக் காவலரண்! மக்கள் கடும் அதிர்ச்சி!!
வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் இராணுவக் காவலரண் ஒன்று அவசரமாக அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த இராணுவக் காவலரண் நேற்று அவசரமாக அமைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுகொலை குறித்த தொகுப்பு அனைத்து மொழிகளிலும் - வைகோ அறிவிப்பு!
ஈழப்போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பான நிகழ்வு தொகுப்பை அனைத்து மொழியிலும் வெளியிட்டு வருகிறோம். வருகிற 5ஆம் திகதி மராத்தி மொழியில் வெளியிடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
யாழ்.குப்பிளான் பகுதியில் இந்து- கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையே முரண்பாடு
யாழ். குப்பிளான் பகுதியில் இந்து - கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையில் தேவாலயம் ஒன்று அமைவது தொடர்பாக கடுமையான முரண்பாடு நிலவிவரும் நிலையில், இந்து மதம் சார்ந்த மக்கள் இன்று காலை அப்பகுதியில் போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)