புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அனுமதியின்றி மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சாட்சியம் அளிக்கச் சென்றமையால் பாராளுமன்ற சிறப்புரிமையை மீறி பாராளுமன்றத்தை அவமதித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவை பிரதம நீதியரசராக நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி இலங்கை சுதந்திர சமுர்த்தி முகாமையாளர்கள், இணைப்பாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்

இணையத்தளங்களை 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்: அரசாங்கம்

புதிய ஒழுங்குமுறைகளுக்கு அமைய, இலங்கையில் செயற்படும் இணையத் தளங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளரிஸானா விரைவில் இலங்கை திரும்பும் சாத்தியம் உண்டு என்றும் அந் நாட்டுத் தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சவூதி மன்னர்



மனைவி நடு வீதியில் வெட்டிக்கொலை: கணவன் கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரண்

மனைவியை நடு வீதியில் வைத்து கத்தியால் வெட்டியும் குத்தியும் கொலை செய்த கொடூரச் சம்பமொன்று நீர்கொழும்பு சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள வெலிஹேன 18 ஆம் கட்டைப்


கொழும்பில் இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் எரிகாயங்களுடன் மீட்பு

கொழும்பு மட்டக்குளி மல்வத்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இராமசாமி யோகேஸ்வரி என்ற இரண்டு குழந்தைகளின் தாயின் சடலம் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.



கலைஞர் கூறுவதை  மக்கள் நம்பமாட்டார்கள் : ராமதாஸ் பேட்டி
வன்கொடுமை தடுப்பு சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதையும் நாடக காதல் திருமணங்களால் அப்பாவி பெண்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவதையும் தடுப்பதற்கு அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை  கலந்தாய்வு கூட்டம் திருச்சியில்

முருகனை நளினி மற்றும் உறவினர்கள் சந்திக்க தடை

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை குற்றவாளி முருகன் மீது சிறைத்துறை நன்னடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனக்குப் பின் ஸ்டாலின்தான்-கலைஞர் பரபரப்பு பேச்சு
வேலூர் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை (3.1.2013) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலைஞர் பேசியபோது,

4 ஜன., 2013


மட்டக்களப்பில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லங்காசிறி தமிழ்வின் இணையத்தளம் உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்தில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மகிழடித்தீவு, மகிழடித்தீவு தெற்கு கிராம அதிகாரி பிரிவு மக்களுக்கு தமிழ்வின் மற்றும் லங்காசிறி இணையத்தளம் ஆகியவை உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் ஊடாக வழங்கி வைத்துள்ளது.

தமிழராய் எழுவோம்! தமிழர் நாடு வெல்வோம்!- மலேசியாவில் நடைபெற்ற 2வது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு
தமிழராய் எழுவோம்! தமிழர் நாடு வெல்வோம்! என்ற தாரக மந்திரத்துடன் மலேசியா, கோலாலம்பூர் நகரில் 2வது உலக தமிழர் பாதுகாப்பு மகாநாடு 2012.12.28ம் திகதி நடைபெற்றது

சபரிமலையில் ஐயப்பனுக்கு 
தங்க ஆபரணப்பெட்டி தூக்கும் தமிழர்!
சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க ஆபரண பெட்டி சுமந்து செல்வதில் மூன்றாவது முறையாக தமிழர் பங்கேற்றார். தமிழகத்தை சேர்ந்த அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர், தன்னார்வ தொண்டர்களாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு

குழந்தைகளை சீரழித்த காமக்கொடூரனுக்கு
 ஆண்மை நீக்கம்: அதிரடி தீர்ப்பு 

பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 


டெல்லி மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை :
 விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
 
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணை விபரங்கள் தெரியவந்துள்ளன. இதன்மூலம் 6 குற்றவாளிகளில் பெயர் வெளியிடப்படாத 17 வயது மைனர் வாலிபர்தான் அதிகப்பட்ச குற்றம் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.


கேரளாவில் பரபரப்பு தீர்ப்பு : மாணவியை பலாத்காரம் செய்து 
கொன்றவனுக்கு மரண தண்டனைகேரளாவில், பள்ளி மாணவி ஒருவரை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

     2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் வகுப்பு பள்ளி மாணவியை, ஆட்டோ ஓட்டுநர் பலாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தான். இது குறித்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக் கப்பட்டது. தீர்ப்பில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சாமியாருடன் கட்டாய உறவுக்கு தள்ளிய கணவன்:
 சீரழிந்த பெண் தீக்குளித்து மரணம்

மேற்கு வங்க மாநிலம் ஜபல்பூரி மாவட்டம் காமக்யாகுரி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி ஸ்வப்னா(வயது 39). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஆண் குழந்தை இல்லாததை ஒரு குறையாகக் கருதி ஸ்வப்னாவை

3 ஜன., 2013


கடந்த மாதம் 23 ஆம் தேதியில் இருந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள 23 ஈழத் தமிழர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல் நிலை மோசமான காரணத்தால் அதில் 12 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையிலும் அவர்கள் உண்ணா நிலை போராட்டத்தை தொடர்கின்றனர். மீதமுள்ளவர்கள் சிறப்பு முகாமில் தொடர்ந்து உண்ணா நிலையில் உள்ளனர்.

தமிழக அரசும் போராட்டத்தில் உள்ள ஈழத் தமிழர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

போராட்டம் தொடங்கிய பின் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ நெடுமாறன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா ஆகியோர் மருத்துவமனை சென்று சிகிச்சையில் உள்ள சிறப்பு முகாம் வாசிகளை சந்தித்துள்ளனர்.

அதன் பின்பு அரசும் சற்று தங்கள் நிலையை தளர்த்தி ஐந்து ஈழத் தமிழர்களை விடுதலை செய்த சம்மதித்துள்ளது.

இதன்படி செல்வம், செல்வராஜா, ரமேஷ், ஜெயபாலன், ரைசுதீன் ஆகியோர்கள் விடுதலை ஆகிறார்கள்.

இவர்களை அரசு விடுதலை செய்தாலும் உண்ணா நிலையில் உள்ளவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. காரணம் சென்ற காலங்களில் அரசு 45 நாட்களுக்கு ஒரு முறை ஐந்து நபர்களை விடுதலை செய்து வந்தது.

இப்போது 90 நாட்கள் ஆகியும் யாரையும் விடுதலை செய்யவில்லை என்பதால் தான் முகாம் வாசிகள் போராட்டாம் நடத்தினார்கள்.

அரசு தற்போது 90 நாட்கள் கழித்து ஐந்து பேர்களை விடுதலை செய்வதை ஏற்க முடியாது, 10 பேர்களையாவது தற்போது விடுதலை செய்ய வேண்டும் எனவும் வருங்காலத்தில் வழமை போலவே 45 நாட்களுக்கு ஒரு முறை ஐந்து பேர்களை விடுதலை செய்ய அரசு உறுதி அளிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் கூறியுள்ளனர்.

மேலும் உலகத் தமிழர்களுக்கு முகாம் வாசிகள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:

தமிழ் நாட்டில் வாழும் ஈழ அகதிகள் விடுதலை அடைய உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அந்தந்த நாடுகளின் இந்திய தூதரகங்களில் தங்கள் கண்டன அறிக்கையை சமர்பிப்பதுடன், பல வகையான போராட்ட முன்னெடுப்புகளை எடுக்குமாறு வேண்டுகிறோம் என்று கூறியுள்ளனர்.கடந்த மாதம் 23 ஆம் தேதியில் இருந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள 23 ஈழத் தமிழர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல் நிலை மோசமான காரணத்தால் அதில் 12 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையிலும் அவர்கள் உண்ணா நிலை போராட்டத்தை தொடர்கின்றனர். மீதமுள்ளவர்கள் சிறப்பு முகாமில் தொடர்ந்து உண்ணா நிலையில் உள்ளனர்.

தமிழக அரசும் போராட்டத்தில் உள்ள ஈழத் தமிழர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

போராட்டம் தொடங்கிய பின் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ நெடுமாறன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா ஆகியோர் மருத்துவமனை சென்று சிகிச்சையில் உள்ள சிறப்பு முகாம் வாசிகளை சந்தித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் இராணுவ அராஜகத்தின் உச்சமாக மாவட்டங்களின் தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பதற்கு படையினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான அனுமதியினை ஜனாதிபதியின் விசேட செயலணி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய மேற்படி மாவட்டங்களின் கல்வி வலயங்களும் பாடசாலைகளில் இராணுவத்தினர் கற்பிப்பதற்கான அனுமதியினை வழங்கியிருக்கின்றன.

இந்நிலையில் 1ம் தவணைக்காக நேற்று பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டபோது சிங்கள மொழி கற்பிக்கப்போவதாக கூறிக்கொண்டு, சீருடைகளுடன் இராணுவச் சிப்பாய்கள் பாடசாலைகளுக்குள் நுழைந்திருக்கின்றனர்.

இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கடுமையான குழப்பமடைந்திருக்கின்றனர். இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் மேற்படி இரண்டு மாவட்டங்களினதும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுடன் ஊடகங்கள் பேச முற்பட்டுள்ளன. ஆனாலும் ஊடகங்கள் என்றவுடன் கல்வி அதிகாரிகள் தொலைபேசியை வைத்துவிட்டு பதறியடித்து ஓடியுள்ளனர். சில அதிகாரிகள் அப்படியா தமக்கு எதுவும் தெரியாதே, நாங்கள் கூட்டமொன்றுக்கு சென்று கொண்டிருக்கின்றோம் என கூறிக்கொண்டு தப்பியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பவம் மிகவும் நகைப்பிற்கும், ஆத்திரத்திரத்திற்குமுரியது என கூறியுள்ளார். அதாவது 6வகுப்பு படித்துவிட்டு இராணுவத்தில் இணைந்த படைச்சிப்பாய்கள் எமது பிள்ளைகளுக்கு கற்பிப்பது எவ்வாறிருக்கும் என கேட்டுள்ள அவர், இந்த இழிநிலையினை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் இராணுவ அராஜகத்தின் உச்சமாக மாவட்டங்களின் தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பதற்கு படையினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான அனுமதியினை ஜனாதிபதியின் விசேட செயலணி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய மேற்படி மாவட்டங்களின் கல்வி வலயங்களும் பாடசாலைகளில்

ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத் நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை ரத்து செய்யுமாறு கோரி, பிரதம நீதியரசர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு வலுவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசரின் மனு எதிர்வரும் 15ம் திகதி விசாரைணக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றம் விசாரணை செய்ய முடியாது: மேன்முறையீட்டு நீதிமன்றம்

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றம் விசாரணை செய்ய முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியுமா என உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றிடம் அரசியலமைப்பு விளக்கம் கோரியிருந்தது.

அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு விசாரணை செய்யும் தகுதி கிடையாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத் நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை ரத்து செய்யுமாறு கோரி, பிரதம நீதியரசர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு வலுவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசரின் மனு எதிர்வரும் 15ம் திகதி விசாரைணக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றம் விசாரணை செய்ய முடியாது: மேன்முறையீட்டு நீதிமன்றம்

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றம் விசாரணை செய்ய முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியுமா என உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றிடம் அரசியலமைப்பு விளக்கம் கோரியிருந்தது.

அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு விசாரணை செய்யும் தகுதி கிடையாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மாணவர்களை விடுவித்து குற்றச்சாட்டுகளை இல்லாமல் செய்யவும்

ad

ad